28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 16


இணைப்பு: 1
 தெற்குச் சூரன்குடி,
 21-9-2002.
            மதிப்புக்குரிய பர்.குருசாமிச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சித்தர் அவர்களுக்கு வணக்கம். இடையில் நெஞ்சுவலி காரணமாகப் பண்டுவம் செய்ய வேண்டியிருந்ததால் தங்களுக்கு மடல் எழுதுவதில் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. பொறுத்தருள்க. துடிசைக் ‌‌‌கிழாரின் தமிழ்ச் சங்கங்களின் வரலாறு நூலைப் படியெடுக்கவும் அஞ்சல்(கூரியர்) செலவுக்காகவும் உரூ 115/-(உரூபாய்கள் நூற்றுப் பதினைந்து)க்குப் பணவிடை விடுக்கிறேன் தனியாக.

            தாங்கள் கூறிவரும் மள்ளர் குறித்த வரலாற்று அணுகலில் எனக்குச் சிறிதும் உடன்பாடு கிடையாது. தமிழகத்தின் எந்தச் சா‌‌திக்கும் இடைமுறிவு இல்லாத வரலாறோ தொடக்கத்திலிருந்தே நேர்கோடாகத் தடம் பிடிக்கத்தக்க சாதியோ கிடையாது என்பது என் துணிவு. அதுவும் மள்ளர் என்ற சொல்லுக்குப் பொருளாகத் தரப்பட்டுள்ள உழவர், மறவர் என்ற இரு சொற்கள் ஒரே மக்கள் குழுவினரைக் குறிக்கிறது என்று உறுதிபடக் கூற முடியுமா என்பது கேள்விக் குறியே. இன்னும், நெல் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் பள்ளர்களே என்பதற்கும் எந்தச் சான்றுமில்லை. ஆனால் நெல் பயிராயினும் சரி வேறு எந்தப் பயிராயினும் சரி தமிழகத்தில் வேறாகவும் குமரிக் கண்டத்தில் வேறாகவும் மக்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர். தென் கிழக்காசியப் பகுதியில் தோன்றி இங்கு பரவிய சம்பா நெல்வகைகளும் அதற்கு முந்திய உள் நாட்டு நெல்வகைகளும் அதற்குச் சான்று கூறுகின்றன. மனிதன் காய்கனிகளைப் பறித்துண்டும் வேட்டையாடியும் பின்னர் கால்நடைகளை வளர்த்துண்டும் புல்‌‌‌வெ‌ளி தேடி அலைந்தும் புல் வளர்ப்பதற்கென்று புல்லையே விதைத்து வளர்த்தும் பின்னர் புன்செய்ப் பயிர்களை அதிலிருந்து இனங்கண்டு இறைச்சிக்குத் துணை உணவுக‌‌‌ளாக உண்ணத் தொடங்கியதும் ஒரு கட்டம். இன்னொரு பக்கம் ஆறுகள் மலையடிவாரத்திலும் அதைத் தொடர்ந்த முல்லை, பாலை நிலங்களில் நிலமட்டத்தை விடத் தாழ்வான மட்டத்தில் ஓடி, பாலை முடிந்து மருத நிலம் வந்த போது நிலமட்டத்தை விட உயரமான மட்டத்துக்கு வந்து புரண்டு ஓடும் போது மழைக் காலங்களில் வண்டலுடன் மலை நெல் போன்ற நன்செய்ப் பயிர்களின் கன்றுகளாகிய நாற்றுகளைச் சுமந்து ஆற்றங்கரைகளில் படியும் சேற்றோடு விட்டுப்போக, அங்கு அவை வேர்கொண்டு விளைய, அங்கு வாழ்ந்த மக்கள் அறுவடை செய்து உண்டனர். பின்னர் இயற்கையைப் போலச்செய்து தவசங்களைக் கலன்களில் முளைக்க வைத்து மழை வெள்ளம் வரும் போது ஆற்றோட்டத்தில் கரைத்து விட்டுக் கூடுதல் தவசங்கள் விளைய வழியமைத்தனர். இது இன்று முளைப்பாரி விழாவாக, வரலாற்று எச்சமாக நிற்கிறது. பின்னர் விதைகளை நேரடியாகவே சேற்றில் விதைத்தனர். இதன் தொடர்ச்சியாக முல்லை நிலத்தில் ஆற்று‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நீரைத் திருப்பி, கலப்பை மூலம் உழுது செயற்கையாகச் சேற்றை உருவாக்கி அதில் நன்செய்ப் பயிர்களை வளர்க்கும் தொழில்நுட்பத்தை உரு‌‌வாக்கினான் வெள்ளையன் என்றும் வாலி என்றும்(வால்=வெள்ளை) பலதேவன் என்றும் பலராமன் என்றும் அழைக்கப்படுபவன். பின்னர் வந்த கண்ணனாகிய கருப்பன் ஏறு தழுவல் மூலம் காளையை வசக்கும் உத்தியைப் புகுத்தினான். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் அவனோ அவன் பின்னால் வந்த இன்னொருவனோ கண்டுபிடித்தான். இரவில் ‌‌‌வெ‌ளிச்சத்துக்காக வெட்ட ‌‌‌வெ‌ளியில் நெருப்பு வளர்க்கப்படுவது நின்று நெய்யில் எரியும் அகல் விளக்கால் குகைகள், குடில்க‌ளின் உட்புறம் ‌ஒளி பெற்றது. அதுவரை மனிதர்களால் இழுக்கப்பட்ட ஏர் வசக்கப்பட்ட காளைக‌‌‌ளால் இழுக்கப்பட்டது. ஆ‌‌‌மாடு பால் கறப்பதற்குப் பயன்பட்டது. வாணிக வளர்ச்சியால் பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் மாடு பயன்பட்டது. இப்போது மாடு உணவுப் பொருள் என்ற நிலையிலிருந்து ஓர் உழைப்புக் கருவி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாகவும் விளைப்புக் கருவியாகவும் மாறியது. இதுவரை வேள்விகளில் மாடுகளைப் பலியிட்டு வந்த பூசகர்களின் வேள்விகளுக்கு எதிர்ப்பு வந்தது. வேள்விகள் முடிவுக்கு வந்தன.

            தமிழ் மக்கள் ஏழு தாய்மார்களிலிருந்து தோன்றிய ஏழு குக்குலங்களைச் சோந்தவர்கள். (உலக மக்கள் அனைவரும் ஐந்து முதல் பத்துக்கு உட்பட்ட எண்ணிக்கையிலுள்ள பெண்க‌ளிலிருந்து தோன்றியவர்கள் என்று அண்மைக் கால ஆய்வொன்று கூறுகிறது). இந்தப் பெண்களை ஏழு கன்னியர், ஏழு தாயர், ஏழு மாதர், சப்த மாதர், சப்த கன்னியர் என்றெல்லாம் குறிப்பிடுவர். இந்த உண்மை பல்வேறு சாதி வரலாறுகளில் காணக்கிடக்கிறது. ஒரே சாதியில் வெவ்வேறு இடங்களில் இவ் வரலாற்றுக்கு மாறுபட்ட இன்னொரு வரலாறு வழங்குவதும் உண்டு. தங்கள் சாதி ஏதோவொரு முனிவரிலிருந்து தோன்றியது என்று அக் கதை கூறும். இது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக்கட்டினுள் அச் சாதி நுழைந்ததின் விளையும் அடையாளமுமாகும். பள்ளர்களில் ஒரு பிரிவான சாலியப் பள்ளர் பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஒரு மாணவர் அவர்க‌ளிடையில் வெவ்வேறிடங்களில் இவ்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ விரு கதைகளும் நிலவுவதாகக் கூறினார்.

            இந்த ஏழு குக்குல மக்களும் குறிஞ்சியாகிய மலை முகட்டிலிருந்து நெய்தலாகிய கடற்கரை வரை கலந்து வாழ்ந்தனர். ஒவ்வொரு குக்குலத்துத்துக்கும் வழிவழியாக வரும் ஒரு பூசகர் தலைமை தாங்கினார். (இந்தப் பூசகர்கள் முதலில் பெண்களாக இருந்ததற்குத் தடயங்கள் உள்ளன). இவ்வாறு ஏழு குக்குலங்களுக்கும் தலைமை தாங்கிய எழு பூசகர்களும் ஏழு முனிவர்கள் அல்லது சப்த இருடிகள் எனப்பட்டனர்.

            தொடக்கத்தில் ஆறுகள்(ஆறு = வழி, வழி = வழிவதாகிய நீரின் மூலம் நடைபெறும் போக்குவரத்துத் தடம்’) கடலில் வீழ்வதால் கடலிலிருந்து ஆறுகள் மூலம் உள்நாட்டின் மீது செல்வாக்குச் செலுத்திய நெய்தல் நிலத்திலிருந்து அரசின் விதை தோன்றியது எனலாம். பூசகர்களின் ஆதிக்கத்துக்கு அறைகூவலாக உருவாகிய நெய்தல் நில ஆதிக்கத்தை முறியடிக்க பூசகர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டதே இந்திர பதவி. இந்திரனின் மனைவியான இந்தி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராணியே உரிமையுள்ள ஆட்சித் தலைவர். அவளது கணவனாக, குறிப்‌பிட்ட கால இடை‌‌‌வெ‌ளிகளில் அல்லது போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவனே இந்திரன். அவன் மீது முனிவர்களின் கட்டுப்பாடு இருந்தது. இச் செய்திகள் நம் தொன்மங்களில் காணக்கிடப்பவை. குமரிக் கண்டத்திலிருந்து சென்று குடியேறியவர்களான எகிப்தியர்களின் இலக்கியங்களில் இது பதியப்பட்டுள்ளது. இந்த இந்திரனின் பணி கோட்டைகள் என்ற குமுக அமைப்பை உடைத்து அம் மக்களைப் பூசகர்களின் ஆதிக்கத்தினுள் கொண்டுவருவதாகும். கோட்டை எனும் இந்த அமைப்புக்கும் இன்று நாம் புரிந்து கொள்ளும் சுவர்களாலா‌‌‌கிய கோட்டைக்கும் தொடர்பில்லை. வேளாண்மை அடிப்படையிலான ஒரு பண்ணையாராகிய தலைமகன், அவனுக்குக் கீழ் உழைக்கும் பண்ணையாட்கள் என்ற ஒரு குமுக ஒன்றிதான் கோட்டை. கோண்டு ரெட்டிகள் எனும் மக்கள் குழுவினரிடையில் இத்தகைய குமுக ஒன்றிகள் இருந்துள்ளன. (மருத நிலத்தில் உருவான செல்வச் செழிப்பினால் சுவராலான கோட்டைகள் உருவாகி‌‌‌‌‌‌‌‌‌யிருக்கவும் கூடும். அதனால்தான் தொல்காப்பியத்தில் மருத நிலத்துப் போர் கோட்டையை முற்றலும் கோட்டையைக் காத்தலுமாகக் கூறப்பட்டுள்ளது). தமக்குள் அடங்கியவையாக, தன்னாட்சியுடன் விளங்கிய இந்த ஒன்றிகளை உடைத்து ஒரு பரந்த நிலப்பரப்பைத் தம் நேரடி ஆளுகையினுள் கொண்டு வருவதே இந்திரனை உருவாக்கிய முனிவர்களின் நோக்கம். இதை நிறைவேற்றிய இந்திரனை கோட்டைகளை அழிப்பவன் எனும் பொருட்படும் புராந்தகன் என்ற பெயரால் இருக்கு வேதம் குறிப்பிடுகிறது. இந்திரனின் ஆதிக்கம் உறுதிப்பட்டதும் நெய்தல் நிலம் தவிர்த்த பகுதிகளின் மேலா‌‌திக்கத்தை அவன் கைப்பற்றிக் கொள்கிறான். முனிவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முயல்கிறான். ஆட்சி அதிகாரம் அவனுக்குத் துணைவர்களை ஈர்க்கிறது. புதிய தொழில்நுட்பங்கள், உழைப்புப் பிரிவினைகள், வாணிகம் என்று வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. முனிவராகிய அகத்தியர் ஒருவர் உருவாக்கிய மொ‌ழி இலக்கணமாகிய அகத்தியத்துக்கு மாற்றாக ஐந்திரம் என்றொரு இலக்கணத்தை இந்‌‌திரனே உருவாக்குகிறான். (ஏழு முனிவர்கள், இந்திரன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஏதோவொரு வகையில் தேர்ந்தெடுக்கபடுவோரின் பதவிப் பெயர்) வாணிகர்கள் மற்றும் தொழில்நுட்பர்களின் குழூஉக் குறிகளைக் கொண்ட ஒரு புதிய மொழியுடன் மக்கள் பேசுவதற்கான பொது மொழியாகத் தமிழ் வடிவம் பெறுகிறது. இவ்வாறு வேத மொழி, சம‌‌‌‌‌‌‌‌‌‌ற்கிருதம் ஆகியவற்றின் விதை ஊன்றப்படுகிறது. இந்திரனின் தொழில்நுட்ப அடிப்படை, காலநிலை மாற்றங்களை முன்னறிவித்து வேளாண்மை நடவடிக்கைகளைத் தொடங்கி வைப்பதேயாகும்.

            மருத நிலத்தில் உருவான வே‌‌‌ளாண்மை வளர்ச்சியின் தொடர்ச்சியே முல்லை நிலத்தில் வாய்க்கால்களின் உதவியுடன் பலதேவனின் பாசனத் தொழில்நுட்பமும் கலப்பையும் சேர்ந்த வேளாண்மையாகும். உழவை எளிதாக்கவும் வண்டி இழுக்கவும் பொதி சுமக்கவும் காளைகளையும் அவற்றை ஈனவும் பால்பொருட்களை வழங்கவும் ஆமாடுகளையும் வளர்த்ததால் செல்வ நிலையடைந்த முல்லை நிலத்துக்குத் கண்ணன் அரசனானான். அவன் மருத நிலம் த‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விர்த்த முல்லை, குறிஞ்சி நிலங்க‌ளின் மீதான ஆதிக்கத்தை இந்திரனிடமிருந்து பிடுங்கினான். முல்லை, குறிஞ்சி நில மக்களுக்கிடையில் நடைபெற்ற ஆதிக்கப் போட்டிதான் மகாபாரதக் கதையின் உள்ளடக்கமாகும்[1]. நாகத்தைக் கொடியாகக் கொண்ட துரியோதனனுக்கும் (அரவக்கொடியோன்) இயற்கையில் பாம்புக்குப் பகையாகிய கருடன் எனப்படும் செம்பருந்தை ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்ட கண்ணனுக்கும்(உவணச் சேவல் உயர்த்தோன் - சிலம்பு) நடைபெற்ற போரே அது. பாண்டவர், கதைக்குச் சுவை சேர்ப்பதற்காகச் சேர்க்கப்பட்ட ‌‌‌வெ‌ளியிலுள்ள 5 அரசர்களே. கண்ணனை இறுதியில் அம்பெய்து கொன்ற வேடன் பெயர் சேரன்என்பதாகும். சேர மன்னர்கள் துரியோதனன் வழி வந்த நாகர்கள். நாகர் குலத்தவரான, முதல் கழக(சங்க)த்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய புறநானூற்றின் முதல் பாடலில் உதியஞ்சேரலாதன், மகாபாரதப் போரில் உயிரிழந்த நூற்றுவர்க்கு முன்னோர் கடன் ஆற்றியதைக் காணலாம். சேரர் கொடியில் வில் இடம் பெற்றதற்கும் நம் முடிவு விளக்கமளிக்கும். இதன் பின்னர் குறிஞ்சி நிலம் முல்லை நிலத்தவ‌‌‌‌‌‌‌ரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். இந்த மாற்றங்களின் ஊடே அரசு எனும் நிறுவனத்தின் அனைத்து உறுப்புகளும் வளர்ச்சியடைந்தன. படைகள், வாணிகக் குழுக்கள் என்று புதுப் புது வகுப்புகள் உருவாயின. குமுகக் கட்டமைப்பு உடைந்தது. நீண்ட நெடிய, கொடிய பாலையைக் கடந்து வாணிகர்கள் செல்லத் துணியுமளவுக்கு வாணிகம் விரிவடைந்ததுடன் ஆதாயம் மிக்கதாகவும் வளர்ந்தது. பாலையின் இரு மருங்கிலுமுள்ள முல்லை, மருத நிலங்களின் வரண்ட எல்லைப் பகுதிகளிலிருந்தும் பிற இடங்களிலுமிருந்தும் வழிப்ப‌‌‌‌‌றியை நம்பிய ஆறலைக் கள்வர்கள் பாலைகளில் குடியேறினர். அனைத்துப் பகுதிகளிலுமிருந்து வந்த இவர்கள் பழந்தெய்வமான கொற்றவையை வழிபட்டனர். நாகர்களாகிய குறிஞ்சி நில மக்கள் தங்கள் தெய்வமான சிவனை வ‌ழிபட்டனர். குறிஞ்சி நிலத்தினரின் வளம் அரசர்களின் படைகளுக்கு வசக்கப்பட்ட யானைகளை வழங்குவதன் மூலமும் வசக்கிய யானைகள் மூலம் தடிகளைச் சுமந்து ஏற்றுமதி செய்ததன் மூலமும் மலைபடு பொருட்களை விற்றதன் மூலமும் பெரு‌‌‌கியது. இவ்வாறு யானையை வசக்‌‌‌கிய முருகன் குறிஞ்சி நிலத் தெய்வமானான். இவ்வாறு ஐந்நிலங்களிலும் மக்கள் தங்கள் பழைய குக்குலப் பாகுபாடுகளை மறந்து ஒவ்வொரு நிலப் பிரிவிலும் மண்ணின் மைந்தர்களாக ஒருங்கிணைந்து தத்தமக்கு ஒரு தலைமையை உருவாக்கி நெடுங்காலம் சென்ற பின்னரே பொருளிலக்கணம் உருவானது. நிலத் தலைவர்கள் இப்போது தெய்வங்களாகிவிட்டனர். அரசர்கள் ஆண்டனர். இதன் பின்னர் நிகழ்ந்ததுதான் சிலப்பதிகாரமும் இறையனார் அகப்பொருள் உரையும் கூறும் முதற் கடற்கோள். அதற்கு முன்பு இடம் பெற்ற எண்ணற்ற கடற்கோள்கள் தமிழ் இலக்கியங்களில் இடம்பெறவில்லை. மேலே கூறப்பட்ட நான்கு நிலைகளிலான தலைமை உருவாக்கங்களுக்கும் சீன, எகிப்திய வரலாறுகளில் பதியப்பட்டுள்ள ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நான்கு பேரரச மரபுகளுக்கும் பாண்டிய அரசை வெவ்வேறு காலங்களில் ஆண்டவர்களுக்கும் தொடர்பு உண்டா என்று ஆய வேண்டியுள்ளது.

            இன்றைய சாதி வரலாறுகளில் கூறப்படும் ஏழு மாதர்களிலிருந்த தொடக்கம், இந்த ஏழு குக்குலங்களும் பிரித்தறிய முடியாத வகையில் ஒன்றுகலந்துவிட்டன என்பதற்குச் சான்றாகும். இருப்பினும் சரியான அணுகலை மேற்கொண்‌டால் தொன்மங்களிலுள்ள செய்‌‌திகளை இழைபிரித்துக் காண முடியும்.

            இன்றைய தமிழகத்தினுள் குமரிக் கண்டத்திலிருந்து முதன் முதலாக நுழைந்தவர்கள் சேரர்களே என்று தோன்றுகிறது. சேர, சோழ, பாண்டியர் என்ற வரிசை முறை ஒரு சான்றாகும். தென் கோடியிலிருந்து கோவா வரையுள்ள மலைத் தொடர் சேரமன்னன் மாவலியின் பெயரால் வழங்கப்படுகிறது. தமிழகக் குறுநில மன்னர்கள் சேரனின் உற‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வினர்களாகக் கூறப்படுகின்றனர். இன்றைய கேரள மக்களின் பண்பாட்டுத் தலைவனாகக் கருதப்படுகிற பரசிராமன் தன் கோடரியால் கேரளத்தை உருவாக்கினான் என்று கேரள வரலாறு கூறுகிறது. இலங்கைத் தீவுக்குச் சேரன் தீவு என்ற பெயரும் உள்ளது. உலகில் முதன் முதலில் நாகரிகங்கள் தோன்றியது அடர்காடுகள் இல்லாத மருதம் -பாலைகளின் எல்லைகளிலுள்ள ஆற்றோரங்களில்தான். இரும்புக் கோடரி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் கங்கைச் சம‌‌‌வெ‌ளி, கேரளம், த‌மிழகம் போன்ற அடர்காட்டுப் பகுதிகளில் மக்கள் பரவிச் செழித்தனர். குமரிக் கண்ட மக்கள் கடைசியாகக் குடியேறிய இடமே தமிழகம். இங்கு வரும்போது அவர்கள் இரும்பின் பயன்பாட்டை அறிந்‌‌திருந்தனர். சேரர்களை அடுத்து வந்தவர்கள் சோழர்கள். அவர்களும் தென்முனை வழியாகவே வந்துள்ளனர். நெல்லையில் ஒடும் பொருனையாற்றுக்குச் சோழனாறு என்ற பெயர் இருந்ததாக கனகசபையார் தான் எழுதியுள்ள ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆதிச்சநல்லூர் பொருனைக் கரையிலேயே அமைந்துள்ளது. சோழர் குல முதலாகிய கதிரவனுக்கு ஆதித்தன் என்ற பெயர் உண்டு. எனவே ஆதிச்சநல்லூர் சோழர்களுக்கு உரியது என்பது வரலாற்றாய்வாளர்களின் முடிவு. இறுதியில்தான் பாண்டியர் வந்தனர்.

            சோழர்களுக்கும் மருதநிலத் தலைவனான இந்திரனுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இதைச் சிலப்பதிகாரம் தெளிவாகவே கூறுகிறது. அதே போல் இந்‌‌திரனுக்கும் பாண்டியனுக்கும் கடும் பகையும் உண்டு. இந்திரனைத் தோற்கடித்தவன் பாண்டியன் என்கிறது சிலம்பு. சேரன் இந்திரனிடமிருந்து கரும்பையும் நெல்லையும் கொண்டு வந்தான் என்கிறது தமிழ் இலக்கியம். இந்திரனின் இருப்பிடம் இந்தோனேசியா, அதை அடுத்த தாய்லாந்து போன்ற நிலப்பகுதிகள் என்கிறார் பாவாணர். அங்குதான் உலகில் சிறப்பாக நெல்லும் கரும்பும் விளைகின்றன. இந்திரனின் ஊர்தியாகக் கூறப்படும் வெள்ளை யானையும் தாய்லாந்தில்தான் உள்ளது. அங்குள்ள ஒரு நகரின் பழம்பெயர் சம்பாபதி. சம்பா என்ற வகை நெல் அங்கிருந்து வந்திருக்கலாம். அது போல் கரும்பின் வகை ஒன்றும் அங்கிருந்து வந்திருக்கலாம்.

            தமிழகத்தைப் பொறுத்தவரை சேர, சோழ, பாண்டியர்களும் அவர்களோடு வந்த மக்களும் வந்தேறிகளே. இவர்கள் இங்கு வந்த போது ஆற்றங்கரைகளிலும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காடுகளிலும் கற்கால நாகரிகத்தில் இருந்தவர்கள் பறையர், துடியர், பாணர், கடம்பர் என்ற நான்கு தலைமைக் குடிகளால் ஆளப்பட்ட மக்கள். கற்காலக் குழுக்களில் ஆதிக்கம் செலுத்துவோரை சாமன்கள் என்ற சொல்லால் மாந்தநூலார் குறிப்பிடுகின்றனர். சாம்பான், சாம வேதம் ஆகியவற்றுக்கும் இந்தச் சொல்லுக்கும் ஏதாவது தொடர்புண்டா என்று தெ‌‌‌‌‌‌‌ரியவில்லை. இவர்கள் ஒருவகை மந்திரவாதிகள் ஆவர். மருத்துவம், பூசகம், புரோகிதம், வ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியம் என்று பல துறைகளில் இவர்கள் வல்லவர். மக்கள் இவர்களுக்கு அஞ்சினர். வசியமே இவர்களது அடிப்படை வலிமை. இதை எய்த இவர்கள் கடும் பயிற்சிகளை மேற் கொள்கின்றனர். நம் தொன்மங்களில் மு‌னிவர்கள் மேற்கொள்வதாகக் கூறப்படும் கடும் நோன்புகளை இவர்கள் நோற்கிறார்கள். இயல்பான வாழ்க்கையிலிருந்து நோன்புகளின் மூலம் தங்களை அழித்து சாமன்களாக மறுபிறவி எடுப்பதாக இந்தப் பயிற்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிகள் விளக்கப்படுகின்றன. இருபிறப்பாளர் என்று பார்ப்பனர்கள் தங்களை அழைத்துக் கொள்வதோடு இதனை ஒப்பிடத் தோன்றுகிறது. இந்தச் சாமன்களின் ஒரு அடையானம் அவர்கள் அனைவரும் ஏதோவொரு இசைக் கருவியை வைத்திருப்பர் என்பதாகும். இன்று குறிசொல்வோரும் பேயோட்டுவோரும் இது போன்ற இசைக் கரு‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விகளை வைத்திருப்பதைக் காணலாம். மேற்கூறிய நான்கு வகுப்புகளில் கடம்பர் தவிர்த்தோர் முறையே பறை, துடி, யாழ் எனும் கருவிகளை உடையவர்கள். கடம்பரின் இசைக் கருவி யாதெனத் தெரியவில்லை.

            குமரிக் கண்ட மக்கள் இங்கு வந்த போது இந்த நால்வகை மக்களும் அவர்களை எதிர்த்துள்ளனர். அதற்கு ஒரு தடயமாக இந் நான்குமே உண்மையான குடிகள் என்று கூறும் புறநானூற்றுப் பாடல் விளங்குகிறது. பின்னர் வந்தேறிகளுக்கும் இவர்களுக்கும் ஓர் இணக்க உடன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும். இவர்கள் மாட்டைக் காவு கொடுத்து உண்ணும் வளர்ச்சிக் கட்டத்தில் இருந்திருக்க வேண்டும். அம்மணம் பரவிய போது அதைத் தழுவியும் சிவனிய எழுச்சியின் போது ஆகமக் கோயிலினுள் பூசகராக நுழைந்தும் தரம் உயர்ந்தவர்கள் தவிர்த்த பிறர் மாட்டிறைச்சி உண்டதால் தீண்டத்தகாதவ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்” என்ற சொலவடை தோன்றியிருக்க வேண்டும்.

            இருக்கு வேதம் இந்திரனோடு சேர்த்து மருத்துகள் என்ற மக்களைக் குறிப்பிடுகிறது. பொருளிலக்கணத்தில் மருத நிலத் தெய்வமாக இந்திரன் குறிப்பிடப்படுவதை இதனுடன் ஒப்புநோக்க வேண்டும். ஆனால் அங்கிருந்த மருத்துகள் சோழர்களோடு இங்கு வந்தார்களா என்று தெரியவில்லை. குமரிக் கண்டத்திலிருந்த இந்திரனுக்கும் சோழர்களுக்கும் நெருக்கமான உறவு இருந்ததினாலேயே பூம்புகாரில் இந்திரவிழா கொண்டாடப்பட்டது. சோழர் குலத்தைச் சேர்ந்த தொண்டைமான் இளந்திரையனின் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பெருநகரிலும் கொண்டாடப்பட்டுள்ளது[2]. அத‌னாலேயே சோழ - தொண்டை மண்டல மக்களெல்லாரும் குமரிக் கண்ட மருத நில மக்களாகியிருக்க வேண்டுமென்தில்லை. அது மட்டுமல்ல, சோழர்கள் ஆண்ட சோழ நாடு முன்பு காவிரியின் பாய்நிலமாக இருக்கவில்லை. காவிரி முன்பு மேற்குக் கடல் நோக்கிப் பாயும் ஓர் ஆண் ஆறாக இருந்திருக்கலாம். தமிழில் நதி என்பதைக் கிழக்கு நோக்கிப் பாயும் பெண் ஆறு என்றும் நதம் என்பதை மேற்கு நோக்கிப் பாயும் ஆண் ஆறு என்றும் வகைப்படுத்தினர்[3]. மேற்குத் தொடர்ச்சி மலையைத் தொட்டு மேற்கே கடல் இருப்பதால் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் எந்தப் பயனுமின்றி கடலில் கலந்து விடுவதால் அவற்றை ஆண் ஆறுகள் என்றனர். கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் சம‌‌‌வெ‌ளிகளில் ஓடிப் பாசனத்துக்குப் பயன்பட்டு நாட்டின் வளத்தைப் பெருக்கியதனால் பெண் ஆறுகள் என்றனர். மேற்கு நோக்கிப் பாய்ந்த காவிரியை தமிழர்கள் முதலில் வேலூர் மாவட்டம் வழியாகத் திருப்பியுள்ளனர். காவிரிப்பாக்கம் எனும் ஊர் அதன் தடயமாக நமக்கு மிஞ்சியுள்ளது. செயற்கைக் கோள் புகைப்படத்தின் துணையுடன் இதனை மெய்ப்பித்துக் காட்டியுள்ளது ‌‌தினமணி கட்டுரை ஒன்று.

            காவிரி, அடுத்து கொங்கு நாட்டுக்குத் திருப்பப்பட்டுள்ளது. ஏற்காடு மலையில் காணப்படும் ஒரு குகை வழியாக அங்கு வந்ததாகவும் செவி வழிச் செய்தி உண்டு. காந்தமன் என்ற சோழ மன்னன் ஒரு பிலத்தினுள் மறைந்த காவிரியை வாளால் மீட்டுச் சோழ நாட்டுக்குக் கொண்டு வந்ததாக மணிமேகலை கூறுகிறது. காந்தமன் என்பது கரிகாலன் என்பதன் சம‌‌‌‌‌‌‌‌‌‌ற்கிருத மொழிபெயர்ப்பாக இருக்கலாம். முதல் கரிகாலனை இது குறிக்கலாம். எப்படி இருப்பினும் சோழர்கள் உறையூருக்கு வந்த போது இன்றைய தஞ்சைத் தரணி ஓர் அரைப் பாலைவனமாகவே இருந்திருக்க வேண்டும். இன்றும் ஏப்பிரல், மே மாதங்களில் இன்றைய ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாகை மாவட்டப் பகுதிகளில் நடமாட நேர்ந்தால் அதன் பாலைவனப் பண்பைப் பட்டறியலாம். குடிநீர் கூடக் கிடைக்காது. கிணற்று நீர் மண்ணெண்ணெய் நாற்றமெடுக்கும் அல்லது இரும்புத் துருவுடன் இருக்கும். எனவே சோழர்கள் வந்து நிலைப்பட்டுக் காவிரியைத் திருப்பிய பின்னர்தான் இன்றைய நெல் வேளாண்மையும் சம்பாவகை நெல்களும் தஞ்சைத் தரணியில் அறிமுகமாகியிருக்கும். பவானி, அமராவதி போன்ற ஆறுகள் முன்பு எப்பாதையில் ஓடின என்பதைக் கண்டு‌பிடித்தால் காவிரிக்கு முந்திய வே‌‌‌ளாண் நிலங்களைத் தடம் பிடிக்க முடியும். சோழர்கள் அங்கு நுழைந்த போது அங்கிருந்த வேடர்களுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மோதலையும் பின்னர் அவர்களுக்‌‌‌கிடையில் ஏற்பட்ட இணக்க உடன்பாட்டையும் காட்டுவதாக, சிபிக்கும் புறா குறித்து வேடனுக்கும் ஏற்பட்ட பூசலை விளக்கலாம். இவ்வாறு சோழ நாட்டு மக்கள் அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள், அதாவது இந்திரனோடு உறவுடையவர்கள் என்று கொள்ள இட‌மில்லை.

            (காவிரி ஓடியதாக மேலே கூறிய தமிழகத்தின் பகுதிகள், இன்று பெரி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாரிய மார்க்சியப் புரட்சியாளர்பெரியவர் ஆனைமுத்துவின் உலைக்களத்தில் உருவானவர்களால் வடிவமைக்கப்பட்ட “தமிழகத்தை ஒதுக்கீட்டுக்காக மூன்று மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும்” என்ற திட்டத்தின் படியமைந்த மூன்று மண்டலங்களாகப் பிரிவதைப் பாருங்கள். இந்த மூன்று மண்டலங்களிலுமுள்ள உழுகுடிகள் முறையே பறையர், சக்கிலியர், பள்ளர் என்பது காண்க. பள்ளர்களே நெற்குடிகள் என்ற தங்களது கூற்று இங்கு பொருந்தாமை காண்க. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தால் முக்குலத்தோர், வன்னியர், வன்னியக் கவுண்டர்கள் தனித்து நின்று அவர்களை வெல்ல முடியாது என்பதுதான் இந்த மூன்று மண்டலக் கோட்பாட்டின் உட்சாரம். தம் மூன்று தொகுதியினரும் ஒன்றுபட முடி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாதென்று அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். ஒடுக்கப்பட்டோர் மூவரும் ஒன்றுபடக் கூடாதென்று தாங்கள் கச்சை கட்டி களத்தில் இறங்கியுள்ளீர்கள்.)

            தமிழகத்தினுள் நிகழ்ந்த அர‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியல் கொந்தளிப்புகள், படையெடுப்புகள், ஊடுருவல்கள், சூழ்ச்சிகள், சமய வடிவிலான தலையீடுகள், ஒற்று வேலைகள், கீழறுப்புகள், குறுங்குழுப் பகைமைகள் ஏராளம். அதனால் மக்கள் பிளவுண்டு ஒருவர் மீதொருவர் ஆதிக்கம் செலுத்த மேற்கொள்ளும் இடையறாத முயற்சிகள் இன்றும் தொடர்கின்றன. இந்த நிகழ்வுகளின் விளைவாக இன்று தமிழகத்தில் மூன்று பெரும் ஆதிக்கச் சாதிப் பிரிவுகளான முக்குலத்தோர், வன்னியர், வன்னியக் கவுண்டர்கள் உருவாயினர்.[4] முக்குலத்தோர் மட்டுமல்ல, வன்னியர், வன்னியக் கவுண்டர் எனப்படுவோரும் கூடத் தனிச் சாதிகளல்ல. இம் மூன்று தொகுதிகளுக்கும் தனித்தனி உள் ஒதுக்கீடுகள் வழங்கினால் அவர்கள் உடனேயே எண்ணற்ற உட்பிரிவுகளாகப் பிரிந்து உள் ஒதுக்கீட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிடுவர்.

            இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டோர் எனும் ஒரே தொகுதி‌‌‌‌‌‌‌‌‌யினுள் இணைந்து நின்று ஒதுக்கீட்டுக்காகப் போராடிய காலத்தில் அவர்களால் ஒடுக்கப்பட்ட பள்ளர், பறையர், சக்கிலியர் உட்பட்ட சாதிகளும் ஒன்று சேர்ந்து அவர்களோடு இணைந்து போராடினர். இன்று பங்குச் சண்டையினால் பிரிந்து நிற்பதோடு பழைய சாதிய வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் வலியுறுத்துபவராக நீங்கள் மாறி நிற்கிறீர்கள். ஒவ்வொரு சாதியும் மாறி நிற்கிறது. இதுதான் பார்ப்பனியம். இதுதான் வெள்ளாளக்கட்டு. இப்படி, நாய் தன் வாலைக் கடிக்கச் சுற்றிச் சுற்றிச் சுழல்வது போல் தமிழ்க் குமுகம் மீண்டும் மீண்டும் உழலக் கூடாது என்பதுதான் என் விருப்பம். அரசுப் பணியோ மக்களுடைமை(தனியார்), அயலார், அலுவலக அல்லது தொழிலகப் பணியோ, ஒதுக்கீட்டின் மூலம் ஒரு நாட்டு மக்கள் அனைவரும் வளமும் வாழ்வும் பெற்றுவிட முடியாது. தங்களையும் தங்களுக்குத் துணை நிற்பவர்களையும் போன்று மேனிலையடைந்து பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டுக்குத் தூண்களாகத்தான் உருவாக முடியும். நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் அனைவருக்கும் பயன்படுமாறு முதலாளிய விளைப்பு முறையில் ஈடுபடுத்தலே அனைவருக்கும் வேலை‌‌வாய்ப்பையும் தொழில் தேர்ச்சி தரும் கல்வியையும் வழங்கும் ஒரே வழி[5]. ‘பிற்படுத்தப்பட்டஆதிக்க சாதியினர் பரிந்துரைக்கும் மூன்று மண்டலங்க‌ளிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஆளுகையில் நாட்டின் அடிப்படைச் செல்வமாகிய வேளாண் நிலங்களில் பெரும்பகுதி உள்ளது. இன்று தீண்டத்தகாததாக ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டுள்ள வேளாண்மையை மானமும் வருமானமும் உள்ள ஒரு தொழிலாக ஆக்குவதுடன் அவர்களில் செல்வம் படைத்தோரிடம் உள்ள செல்வத்தை மூலதனமாக்கிப் படிப்படியாகப் பெருந்தொழில்களில் ஈடுபடச் செய்வதற்கான போராட்டமுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கு வழி என்பது எம் நிலைப்பாடு. இதைப் பல மடல்கள் மூலம் தங்களுக்கு தெரிவித்துள்ளேன். தாங்கள் முதல் மடலை மட்டும் வெளியிட்டீர்கள்(நன்றி!). பிறவற்றைப் புறக்கணித்தீர்கள். ஒதுக்கீட்டின் பயனை நுகர்ந்து அதன் பயனாகக் கிடைத்த உயர்நிலையைத் தங்களுக்கு மட்டும் நிலைநிறுத்தவும் தங்களைப் பார்ப்பனியம் எனும் வெள்‌‌‌ளாளக்கட்டினைத் தழுவும் குழுக்களுடன் இணைத்துக் கொள்ளவும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விரும்புவோரின் தலைவராகவே தாங்கள் தொடர விரும்புகிறீர்கள் என்பது தெளிவாகிறது. அதற்காகத் தாங்கள் மேற்கொண்டுள்ள தவறான வரலாற்று அணுகலில் எனக்கு உடன்பாடில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்தருள்க.

            சாதி வரலாறுகள் உருவாகும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விதத்துக்கு ஒரு பதமாக நாடார்க‌ளின் வரலாறு பற்றிய ஓர் ஆய்வை இத்துடன் இணைத்துள்ளேன். இதே முறையில் பள்ளர்களின் வரலாற்றை அணுகலாம் என்பது எனது வேண்டுகோள். கி.பி.10ஆம் நூற்றாண்டில் பள்ளர் என்ற சொல் இராசராசன் கல்வெட்டொன்றில் ‌‌‌வெ‌ளிப்பட்டுள்ளதாக மள்ளர் மலர் இதழொன்றில் படித்தேன். அப்படியானால் பள்ளர் என்ற சாதியின் தோற்றம் கிட்டத்தட்ட அந்தக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காலகட்டத்தில் இருக்கலாம். சோழப் பேரரசின் காலத்தில்தான் பழைய சாதிகள் மறைந்து எண்ணற்ற புதிய சாதிகள் உருவாயின. எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டு அவற்றின் கீழ் நிலங்களும் அவற்றோடு பண்ணையடிமைகளும் கொண்டுவரப்பட்ட காலத்தில் கோயில் கட்டுமானம், பராமரிப்பு, குத்தகை வேளாண்மை என்று புதிய வேலைப் பங்கீடுகளும் தொழில்களும் அதன் விளைவான சாதிகளும் உருவாயின என்பது வரலாறு. பின்னர் நீங்கள் அடிக்கடி கூறுவது போல் 17ஆம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் ஒரு வலுவான மக்கள் குழு‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வினராக உருவான போது பள்ளுப்பாடல்கள் உருவாகியிருக்கலாம்[6]. சோழப் பேரரசுக் கால வரலாற்றை ஊன்றிப் பார்த்தால் பள்ளர்களின் தோற்றம் பற்றிய புதிர் விடுபடக் கூடும். அவ்வாறு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விடுபடுவதால் புதிதாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை. பிற சாதிகளைப் போல் பள்ளர் சாதிகளும் ‌‌‌மாயை, மக்களின் இடப்பெயர்ச்சிகள், அரசியல் கொந்தளிப்புகளின் விளைவாகப் புதிதாகத் தோன்றிய சாதியே இதுவும் என்பது தெரியவரும். அப்போதும் அடிமை, கொடுமை விலங்குகளை உடைத்தெறியும் உறுதியான படையாகிய பொருளியல் வளர்ச்சியே தீர்வு என்பது புலப்படும். எதிர்காலம்தான் நம் குறிக்கோள். எனவே உண்மையான வரலாற்று அணுகலுடன் எதிர்காலச் செயற்பாட்டுக்கு ஆயத்தமாகுங்கள் என்பதே என் வேண்டுகோள்.
 அன்புடன்,
 குமரிமைந்தன்.


[1] இதில் குக்குலங்களுக்கும் அவற்றிலிருந்து தோன்றிய ஐந்நிலப் பண்பாடுகளுக்கும் இடையிலான பூசலும் வெளிப்படுகிறது. நாகர்கள் நாகத்தைத் தோற்றக்குறியாகக் கொண்ட குக்குலப் பிரிவினர். முல்லைப் பண்பாடு குக்குலங்கள் ஒன்றோடொன்று மயங்கி ஐந்நிலங்களடிப்படையில் மக்கள் மண்ணின் மைந்தர்களாகப் பிளவுண்டதில் முல்லை நிலத்துக்குரியவர். ஐந்நில மக்களுக்கும் நாகர்களுக்குமான மோதல்களை நம் தொன்மங்களினூடாகத் தடம் பிடிக்க முடியும்.
[2] குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் கோயிலின் பெயரிலிருந்தும் அக் கோயில் தொடர்பான பல்வேறு கதைகளிலிருந்தும் அது ஒரு கட்டத்தில் இந்திரன் கோயிலாக இருந்துள்ளமை உறுதியாகிறது.
[3] கதிரைவேற் பிள்ளையின் தமிழ் மொழி அகராதி பார்க்க.
[4]  கடந்த 8 நூற்றாண்டுகளாக வெளிப்படையெடுப்பாளர்களுக்குத் துணைநின்றே அவர்கள் இந்த ஆதிக்க நிலையை அடைந்தனர் ‌என்பது வரலாற்றினுள் புதைந்து கிடக்கும் உண்மை.
[5]முதலாளியம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் பயன் தருமென்ற ஐயம் எழுமாயின் அது பற்றி விரிவாக விளக்க அணியமாகவுள்ளேன்.
  [6]  20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போல் கோயில்களுக்கு “வாரம்” அளக்காமல் “அடம்பிடித்த” குத்தகையாளர்களை மயக்கி வசக்குவதற்கே அவர்களை வானளாவப் புகழ்ந்து பள்ளுப் பாடல்கள் உருவாக்கப்பட்டன.

8 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா ? ஏதோ எழுதுகிறோம்
என்று எழுதினால் மட்டும் போதாது . ஆதாரம் வேண்டும் தமிழ்சகோதரரே!
ஐயா குருசாமி சித்தர் அவர்கள் ஆதாரத்தோடு எழுதுகிறார் அதற்கு உங்களிடம் மறுப்பு ஆதாரம் இல்லையே ? இருக்கலாம்! இருந்திருக்கலாம்! வந்திருக்கலாம் ! இதுதான் நீங்கள் அவருக்கு வரையும் மடலா ?
நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின்

சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில

மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத்

தொல்காப்பியம்.

“ “மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்

சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்

வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்

வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்” ”
—-
—-தொல்காப்பியம்.

மள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொ
ல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள். ‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.

மள்ளர்களை வரலாறு அற்றவர்களாக ஒடுக்கி வைப்பதற்காக எழுதப்பட்ட பள்ளு இலக்கியங்களில் மள்ளர்களின் உண்மை வரலாறும் மறைமுகமாகப் பதிவாகியுள்ளது.
“மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்” ”முக்கூடற்பள்ளு“

மள்ளர்களைப் பள்ளர் என்று அழைப்பதை ஏற்க மறுப்பதை முக்கூடற்பள்ளு ஆசிரியரே பதிவு செய்துள்ளார். இதனை,

“பக்கமே தூரப் போயும் தக்க சோறென் வேளாண்மை பள்ளா பள்ளா என்பான்மெய் கொள்ளாதவர்…

என்ற பாடல் அடிகளின் மூலமாக அறியலாம். பள்ளர் என்பது இவர்களின்

வழி வழியான பெயராக இருந்திருந்தால் இப்பெயரால் பிறர் உயர்வு, தாழ்வுகண்டிருக்க மாட்டார்கள். மரபு வழியில் இவர்களுக்கு “மள்ளர்” என பெயர் இருக்க“பள்ளர்” என்பது திடுமெனப் புழக்கத்தில் வரும் போது அதனை எதிர்ப்பது இயல்பாகவே இருந்திருப்பதை முக்கூடற்பள்ளு புலப்படுகிறது. “பன்னிரு பாட்டியல் உழத்திப் பாட்டு” என்னும் சிற்றிலக்கிய வகையையும், அதற்கான இலக்கணத்தையும் குறிப்பிடுகிறது. எனவே, அவ்விலக்கணத்தின்படி உழத்திப் பாட்டு என்றும் தனி இலக்கிய வகையே அன்றைய அரசியல் மாற்றத்தால் மறைக்கப்பட்டு, அதற்கு நேர்மாறாக அவர்களைப் பண்ணை வேலையாட்களாகச் சித்தரிக்கும் பள்ளுப் பிரபந்தமாக்கிப் பிரபலப்படுத்தியிருக்கின்றனா் நாயக்க ஆட்சியாளா்கள்.


1. ஆண்டாண்டு காலம் தொட்டு மருதநிலத்தில் வாழும் மக்கள் யார் ?
இலக்கியங்கள் கூறும் ஐவகை நிலங்களில், மருதநிலத்தில் வாழ்ந்த
மக்கள் யாரென்று கூறுகிறது ?
2. மல்லர்,மள்ளர்,பள்ளர் என்பதன் பொருள் என்ன?
3. மள்ளர்களில் வலிமையானவர் யார்?
3. வேந்தர் என்பதன் பொருள் என்ன? எந்தநிலத்துஅரசர்?
4. மள்ளர்க்கும் வேந்தர்க்கும் என்ன தொடர்பு ?
5. வேந்தர் எவ்வாறு உருவாயினர்?
6. மல்லாண்டவர் என்பவர் யார் ? அவருக்கும் பள்ளர்க்கும் என்ன தொடர்பு ?
7. மூப்பன் ,குடும்பன் ,காலாடி என்பதன் பொருள் என்ன? இவர்களைப்பற்றி இலக்கியம் என்ன சொல்கிறது ?

மேலும் நன்றாக ஆய்ந்து ஐயா குருசாமி சித்தர்க்கு மடல் எழுதுங்கள்

சொன்னது…

ஆதாரம் 1 : “ "'தேவேந்திரப் பள்ளரில்' வெள்ளானன வேந்தன், மிக விருது பெற்றவன் சேத்துக்கால் சென்னன், சென்னல் முடி காவலன், தேவேந்திர வரபுத்திரன், மண்வெட்டி கொண்டு மலையைக் கடைந்த கண்ணன், வெள்ளானனக் கொடி படைத்தவன், வெள்ளைக்குடை, முத்துக்குடை, பவளக்குடை, பஞ்சவர்ணக்குடை, முகில் கொடி, புலிக்கொடி, அலகுக்கொடி படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் குருணிகுர 'தேவேந்திர பள்ளர்'" ”
—-காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்
[10]

சொன்னது…

ஆதாரம் 2: “ "தேவேந்திர பள்ளன் வெள்ளை பூச்சக்கரக் குடை வெள்ளையானை படைத்தவர்" ”
—-நல்லூர் செப்புப்பட்டயம்

சொன்னது…

ஆதாரம் 3: “ "வெள்ளாண்மை யுலகில் வியனப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வரிசையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகழ் சேர் சேறாடிக் குடையும் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால் செல்வரான குடும்பர்களும்" ”
—-சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு

சொன்னது…

ஆதாரம் 4: திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு

“ விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803

சொன்னது…

ஆதாரம் 5: “ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ”
—- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.

சொன்னது…

சும்மா ஏதாவது எதிற்ப்பு எழுதனும்னு எழுதாதிங்க ஐயா.நீங்களும் மல்லர்களின் கிளை குடி தான்,இப்படி உங்கள் தற்பெறுமைக்காக வரலாற்றை மறைக்க முயற்ச்சிக்க வேண்டாம்.அழிவது மள்ளர்கள் இல்லை தமிழ் என்பதை நினைவில் வையுங்கள்...

உலக ஆராய்ச்சியாலர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்,தமிழகத்தில் திராவிடம் என்ற ஒரு திருட்டு இயக்கம் கிளப்பிவிடும் சூழ்ச்சிக்கு இறையாகாதீர்கள்...

சொன்னது…

"பெயரில்லா" என்று கருத்துரை வழங்கியிருப்பவர் பெயரைக் குறித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். அனைவருக்கும் நான் வைக்கும் ஒரு வேண்டுகோள், "நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது" என்ற சொலவடையின் அடிப்படையில் பள்ளு வகைக்களை பட்டியலிட்டு அந்தக் குறிப்பிட்ட பிரிவினரின் சிறப்புகள் பற்றிய செய்திகளைத் தாருங்கள்.அப்புறம் நான் விடை கூறுகிறேன்.

Gk the Malla தந்துள்ள பட்டயங்கள் செப்பேடுகள் யார், யாருக்கு, எதற்காக,எப்போது வழங்கினார் என்ற செய்தியைத் தாருங்கள், ஏனேனில் சாதி வரலாற்றாசிரியர்கள் காட்டும் பெரும்பாலான செப்பேடுகள் தம் நாட்டின் மீது படையெடுக்கும் அயலவர்களுக்கு தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்ததனால் படையெட்டுத்த எதிரி நாட்டரசர்கள் வழங்கியவையாகவே இருக்கின்றன்.

சங்கரநயினார் கோயில் கோபுர வாசல் கல்வெட்டில் தரப்பட்டுள்ள செய்தி பாண்டியர்கள் குமரிக் கண்டத்திலிருது இன்றைய வரண்ட தமிழகப் பகுதிக்கு வந்த போது கிணறு வெட்டிப் பாசனம் மேற்கொள்ள பாறை உடைக்கும் கருவிகளைச் செய்ய கொல்லர், கவலை இழுக்க குதிரைப் பாகர், மெய் வேலைக்காரர் ஆகியோரின் மேற்பார்வையாளராக பழைய உழவனை அமர்த்தியதைக் குறிக்கிறது. காலம் செல்லச் செல்ல அரசியல் செல்வாக்குள்ளோர் அனைவரையும் அடக்கியது "அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர்" என்று தொல்காப்பியம் தரும் தமிழர் பண்பாடு. உடலுழைப்போருக்கு களவு, கற்பு எனப்படும் அக வாழ்வு கிடையாது, அவர்களது பெண்கள் "மேலோரி"ன் கட்டற்ற நுகர்வுக்குரியவர்கள் என்று நேற்றுவரை இருந்த நடைமுறை.

திராவிட இயக்கத்தை இங்கு ஏன் இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. பனியா - பார்ப்பன அதிகாரக் கூட்டணியால் சென்னை மாகாணத் தொழில் முனைவோரின் பொருளியல் நடவடிக்கைகள் தடுக்கப்படுகின்றன என்பதற்காக அனைத்து பக்களையும் ஓரணியில் கொண்டுவர முயன்றது நயன்மைக் கட்சியாகிய தென்னிந்திய நல உரிமைச் சங்கம். அதைப் பெற்றுக்கொண்ட பெரியார் பணத்தாசையால் பனியாக்களுக்கு விலை போனதுமன்றி தமிழக மக்களிடையில் கொழுந்துவிட்டெரிந்த சாதி எதிர்ப்பு உணர்வைக் காசாக்கவும் முனைந்து வெறும் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்து தொழில் வளர்ச்சி குன்றியதால் வேலைவாய்ப்பின்றி சாதி மோதல்கள் வளர்வதற்கும் வழி வகுத்தார். அண்ணாத்துரை இனிமையாகப் பேசி கொள்கையில்லாக் கூட்டணியை இந்திய வரலாற்றில் உருவாக்கி 16 மாதம் முதல்வர் பதவியை நுகர்ந்து செத்தார். அடுத்து வந்த ஊழல்கலை வித்தகர் தமிழகத்துக்கு எல்லையற்ற கேடுகளை விளைத்து இன்னும் விளைக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் நயன்மைக் கட்சி விட்டுச் சென்ற தமிழகப் பொருளியல் தற்சார்புக் கனவை நனவாக்க நான் பாடுபடுகிறேன். தமிழகத்து விளைநிலங்களில் பெரும்பாலானவற்றைத் தங்கள் கைப்பிடியில் வைத்திருக்கும் பள்ளர், பறையர், சக்கிலியர், பிற்ப்பட்ட, மிகப்பிற்பட்ட சாதியிரை வேளாண்மை மீது ஆட்சியாளர்கள் இட்டுவைத்திருக்கும் தடைகளை அகற்றி, தளைகளை அறுத்து மீட்கும் போராட்டத்தில் ஒன்றிணைக்குமாறு நான் பண்டிதர் குருசாமிச் சித்தரை வேண்டினேன். உங்களுக்கு தமிழக மக்களை சாதிகளாக இன்னும் இறுக்கமாக உடைப்பதில் இன்பம் என்றால் அதைச் செய்து மகிழுங்கள். நான் எனது வழியில் தமிழக மக்களை சாதி சமய, மொழி, இன எல்லைகளை உடைத்து ஒன்றிணைக்கும் என் பணியைத் தொடர்வேன். அதனால்தான் என் சாதியினரின் வரலாற்றையும் பல எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது எழுதியுள்ளேன். வரலாறு எதிர்காலத் தமிழகத்துக்கு என்ன வைத்திருக்கிறது என்பதைக் காலம் முடிவு செய்யட்டும்.