திராவிட மாயை - 29
பாராளுமன்றமும்
மக்களாட்சியும்…..தொடர்ச்சி..
குடிமை
1.1
1956
நவம்பர் 1ஆம் நாளன்று இன்றைய தமிழகத்தில் வாழ்ந்திருந்தோருக்கும் அவர்களுடைய வழி வந்தோரில்
தமிழ் நாட்டினுள் வாழ்ந்திருப்போருக்கும் மட்டுமே முழுக் குடியுரிமை உண்டு.
1.2
அவர்களைத்
திருமணம் செய்வதன் மூலம் இங்கு குடியேறி வாழ்பவர்களுக்கும் அவர்களது வழிவந்தோரில் இங்கு
வாழ்வோருக்கும் மட்டுமே முழுக் குடியுரிமை உண்டு.
1.3
நாம் முன்வைத்துள்ள எல்லை மீட்பு வேண்டுகையின் படி தமிழ்நாட்டோடு
இணையும் பகுதிகளில் 1956 நவம்பர் முதல் நாள் வாழ்நதவர்களும் அவர்கள்
வழிவந்தவர்களும் மட்டும் தமிழகத்தின் முழுக் குடியுரிமைக்குத் தகுதியுடையவராவார்.
1.4
அவர்களைத்
திருமணம் செய்வதன் மூலம் இங்கு குடியேறி வாழ்பவர்களுக்கும் அவர்களது வழி வந்தோரில்
இங்கு வாழ்வோருக்கும் முழுக் குடியுரிமை உண்டு.
1.5
8ஆம் வகுப்பு வரை படித்திருப்பது முழுக்குடியுரிமைக்குரிய
அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாகும்.
1.6
மாநிலத்துக்கு வெளியிலிருந்து பண்டங்கள் வாங்கிச் செல்லவோ
கொண்டுவந்து விற்றுச் செல்லவோ வேலைசெய்யவோ வருவோருக்கு தற்காலக் குடிமைச்
சான்றுகள் வழங்கப்படும்.
1.7
வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் வழக்கு மன்றம் சென்றவர்கள்,
திருட்டு, எமாற்று, பொய்ச் சான்று(பொய்ச் சாட்சி), பாலியல் வன்முறை, கொலை முயற்சி, கொலை முதலிய
குற்றங்கள் இழைத்தவர்களுக்கும் குடிகாரர்களுக்கும் குடும்பத்தைப் பேண
முடியாதவர்களுக்கும் முழுக்குடிமைச் சான்று வழங்கப்பட மாட்டாது.
1.8
1956
நவம்பர் 1ஆம் நாளன்று இன்றைய தமிழகத்தில் வாழ்ந்திருந்தோருக்கும் அவர்களுடையவழி வந்தோரில்
தமிழ் நாட்டினுள் வாழ்ந்திருப்போருக்கும் மட்டுமே முழுக் குடியுரிமை உண்டு.
1.9
அவர்களைத்
திருமணம் செய்வதன் மூலம் இங்கு குடியேறி வாழ்பவர்களுக்கும் அவர்களது வழிவந்தோரில் இங்கு
வாழ்வோருக்கும் மட்டுமே முழுக் குடியுரிமை உண்டு.
1.10
நாம் முன்வைத்துள்ள எல்லைமீட்பு வேண்டுகையின் படி
தமிழ்நாட்டோடு இணையும் பகுதிகளில் 1956 நவம்பர் முதல் நாள் வாழ்நதவர்களும் அவர்கள்
வழிவந்தவர்களும் மட்டும் தமிழகத்தின் முழுக்குடியுரிமைக்குத் தகுதியுடையவராவார்.
1.11
அவர்களைத்
திருமணம் செய்வதன் மூலம் இங்கு குடியேறி வாழ்பவர்களுக்கும் அவர்களது வழி வந்தோரில்
இங்கு வாழ்வோருக்கும் முழுக் குடியுரிமை உண்டு.
1.12
8ஆம் வகுப்பு வரை படித்திருப்பது முழுக் குடியுரிமைக்குரிய
அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாகும்.
1.13
மாநிலத்துக்கு வெளியிலிருந்து பண்டங்கள் வாங்கிச் செல்லவோ
கொண்டுவந்து விற்றுச் செல்லவோ வேலைசெய்யவோ வருவோருக்கு தற்காலக் குடிமைச்
சான்றுகள் வழங்கப்படும்.
1.14
வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் வழக்கு மன்றம் சென்றவர்கள்,
திருட்டு, எமாற்று, பொய்ச் சான்று(பொய்ச் சாட்சி), கொலை முயற்சி, கொலை முதலிய
குற்றங்கள் இழைத்தவர்களுக்கும் குடிகாரர்களுக்கும் குடும்பத்தைப் பேண
முடியாதவர்களுக்கும் முழுக் குடிமைச் சான்று வழங்கப்பட மாட்டாது.
2.1
தமிழ்
நாட்டில் வாழும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.
2.2
முழுக்
குடியுரிமை உள்ளோருக்கும் முழுக் குடியுரிமை இல்லாதோருக்கும் வெவ்வேறு வகை அடையாள அட்டைகள்
வழங்கப்படும்.
2.3
1.7.இல் கூறியுள்ளபடி முழுக் குடியுரிமைக்குத்
தகுதியிழந்தோருக்குத் தனி அடையாள அட்டை வழங்கப்படும்.
3. குடியேற்றம் குறித்து தவறான செய்தியோ சான்றோ
தரும் அலுவலர்களுக்கும் பிறருக்கும் கடும் தண்டனை வழங்கப்படும்.
4. முழுக் குடியுரிமை பெறாதவர்கள் தமிழகத்தினுள் அசையாச்
சொத்துகளில் முதலிட முடியாது. தொழில்களிலும் பங்குகளிலும் முதலிட முடியாது. வாணிகத்தில் ஈடுபட முடியாது.
5. முழுக் குடியுரிமை பெறாத எவரும் தமிழகத்தினுள் தேர்தலில் போட்டியிட முடியாது.
7. முழுக் குடியுரிமை பெற்றோர், முழுக்
குடியுரிமை பறிக்கப்பட்ட உள்நாட்டார், தற்காலக் குடியுரிமை பெற்றோர் அனைவரும்
அவரவர்க்கு நிறுவப்பட்ட குடிமை வரியை உரிய காலத்தில் தவறாது செலுத்திவர வேண்டும்.
தவறினால் அவர்களது குடிமை உரிமைகள் பாக்கி விழுந்த காலத்தில் செல்லுபடியாகா.
ஆள்வினை
அமைப்பும் தேர்தலும்
க.ஆள்வினையாளர்கள்
1.
நிலையான படிநிகராளியர் மன்றங்கள் கிடையா.
2.
ஆள்வினைத் தேவைகளுக்காக தெற்கு, நடு, வடக்கு, கிழக்கு, மேற்கு
என ஐந்து மண்டலங்களாக இந்தியாவைப் பிரித்து அவை ஒவ்வொன்றுள்ளும் அடங்கும்
மாநிலங்களை வரையறுக்க வேண்டும்.
3.
மாநிலம் ஒவ்வொன்றையும் பைதிரங்களாகவும் ஒவ்வொரு பைதிரத்தையும்
5 மாவட்டங்களாகவும் ஒவ்வொரு மாவட்டத்தையும் 5 கோட்டங்களாகவும் ஒவ்வொரு
கோட்டத்தையும் 5 வட்டங்களாகவும் ஒவ்வொரு வட்டத்தையும் 5 கூற்றங்களாகவும் ஒவ்வொரு
கூற்றத்தையும் 5 ஊராட்சிகளாகவும் பிரிக்க வேண்டும்.
இந்தியா
↓
தெற்கு, நடு, வடக்கு,
கிழக்கு, மேற்கு மண்டலங்கள்
↓
மாநிலங்கள்
↓
பைதிரங்கள்
↓
× 5 மாவட்டம்
↓
×5 கோட்டம்
↓
×5 வட்டம்
↓
×5 கூற்றம்
↓
×5 ஊராட்சி
1.1.
அந்தந்த
ஊராட்சியில் உள்ள முழுக்குடியுரிமையுள்ளவர்களில் 30 ஆண்டு அகவை நிரம்பிய,
ஆள்வினையாளர் தேர்வில் தேறியவர்களிலிருந்து குடவோலை முறையில் ஊராட்சித் தலைவர்
தேர்ந்தெடுக்கப்படுவார்.
1.2. ஊராட்சித் தலைவர்களிலிருந்து
கூற்றத்தலைவரையும் கூற்றத் தலைவர்களிலிருந்து வட்டத் தலைவர்களையும் வட்டத்
தலைவர்களிலிருந்து கோட்டத் தலைவர்களையும் கோட்டத் தலைவர்களிலிருந்து மாவட்டத்
தலைவரையும் மாவட்டத் தலைவர்களிலிருந்து பைதிரத் தலைவரையும் பைதிரத்
தலைவர்களிலிருந்து மாநில ஆளுநரையும் மாநில ஆளுநர்களிலிருந்து மண்டல ஆளுநரையும்
மண்டல ஆளுநர்களிலிருந்து இந்தியக் குடியரசுத் தலைவரையும் குடவோலை முறையில்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
1.3. ஒரு பதவிக்குத் தேர்வானவர்
அதிலிருந்து அடுத்த உயர்பதவிக்குத் தேர்வானால் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை
நிரப்புவதற்கு வசதியாய் ஒவ்வொரு நேர்விலும் இரண்டாவது, மூன்றாவது என்று கூடுதலாக
இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பதவியிலிருப்போர் விலக விரும்பினால் அல்லது நோயுறல், மரணம், பதவி நீக்கம் போன்ற சூழல்களில் ஏற்படும் வெற்றிடத்தை
இரண்டாவது, மூன்றாவது தேர்வானவர்கள் வரிசைப்படி நிரப்புவர்.
1.4.
ஒருவர்
தன் வாழ்நாளில் ஆள்வினைப் பதவிகளுக்கு மொத்தம் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட
பின் போட்டியிட முடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள்வினையாளர்கள் அரசியல் சட்டத்தின்படியுள்ள
தங்கள் அதிகார வரம்புக்குள் உரிய அலுவலர்களைக் கொண்டு ஆட்சியை நடத்த வேண்டும்.
கா.உசாவல்
மன்றங்கள்
1
ஆள்வினையாளர்களும்
அலுவலர்களும் செய்யும் முறைகேடுகள், சட்டமீறல்களைக் கண்காணிப்பதற்கு ஒவ்வொரு
வட்டத்துக்கும் கோட்டத்துக்கும் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த மட்டங்களில்
பைதிரத்துக்கு ஒன்றும் மாநிலத்துக்கு ஒன்றும் மண்டலத்துக்கு ஒன்றும் இறுதியில்
இந்திய மட்டத்தில் ஒன்றும் உசாவல் மன்றங்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட
வேண்டும்.
2.1.1. இந்த மன்ற உறுப்பினர் ஆக விரும்புவோர் அதற்குரிய தேர்வில் தேறியிருக்க
வேண்டும்.
2.1.2
30 ஆண்டு அகவை நிரம்பியிருக்க வேண்டும்.
2.1.3 முழுக்குடியுரிமை உள்ளவராயிருக்க வேண்டும்.
2.1.4. ஊராட்சி ஒன்றுக்கு ஐவர் வீதம் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு
ஒவ்வொரு கோட்டத்தினுள்ளும் அடங்கிய அனைத்து ஊராட்சிகளிலும்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலிருந்து கோட்ட உசாவல் மன்றத்துக்கு குடவோலை முறையில்
ஐவர் தேர்வு செய்யப்படுவர்.
2.1.5. அவ்வாறு தேர்வானவர் நீங்கலாக ஒவ்வொரு பைதிரத்துக்கும் பைதிரம்
முழுவதும் உள்ள ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலிருந்து குடவோலை முறையில்
ஐவர் பைதிர உசாவல் மன்றத்துக்கு ஐவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
2.1.6. இவ்வாறு அனைத்து பைதிரங்களிலும்
தேர்வானவர்களிலிருந்து குடவோலை மூலம் மூவர் மாநில உசாவல் மன்ற உறுப்பினர்களாகத்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
2.1.7. ஒவ்வொரு மண்டலத்தின் கீழுள்ள மாநில
உசாவல் மன்ற உறுப்பினர்களிலிருந்து மண்டல உசாவல் மன்ற உறுப்பினர் மூவர் குடவோலை
முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
2.1.8. மண்டலங்களிலுள்ள உசாவல் மன்ற
உறுப்பினர்களிலிருந்து மூன்று தலைமை உசாவல் மன்ற உறுப்பினர்கள் குடவோலை முறையில்
இந்திய உசாவல் மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3.1 ஆள்வினையாளர்கள்
முறைகேடுகள், ஊழல்கள், சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக உசாவல் மன்றங்கள்
தீர்ப்பளித்தால் குற்றத்திற்கேற்ப பதவிப்பறிப்பு, சிறை, தண்டம், சொத்துகள் பறிப்பு
என்று தண்டனைகள் வழங்கப்படும்.
3.2. மேல் முறையீடு செய்ய விரும்பினால் ஒரேயொரு
மேல்முறையீடு செய்யலாம்.
3.2.1. முறையீட்டில் உசாவல் மன்றம் வேண்டுமென்றே
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்தால், அவர்களுக்கு
வழங்கப்பட்ட தண்டனையை தீர்ப்புக்குப் பொறுப்பான உசாவல் மன்ற உறுப்பினர்களுக்கு
வழங்க வேண்டும்.
3.2.2 வேண்டுமென்றே குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சார்பாகத்
தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரியவந்தால் குற்றஞ்சாட்டப்பட்டவர் செய்ததாக அறியப்படும்
குற்றங்களுக்கு உரிய தண்டனையை அவ்வாறு தவறாக தீர்ப்பு வழங்கியதற்குப் பொறுப்பான
உசாவல் மன்ற உறுப்பினர்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் சேர்த்து வழங்க
வேண்டும்.
4.1. முறையீடுகள் தீர்ப்பு வழங்கிய உசாவல் மன்றத்துக்கு மேலுள்ள அடுத்த
உசாவல் மன்றத்தால் உசாவப்படும். தலைமை உசாவல் மன்றத்தின் மீது முறையீடு செய்ய
வேண்டுமாயின் குடியரசுத் தலைவருக்குச் செய்ய வேண்டும். அவர் அனைத்து மாநில உசாவல்
மன்ற உறுப்பினர்களிலிருந்து ஒரு குழுவைக் குடவோலை முறையில் தேர்ந்தெடுத்து அதைக்
கொண்டு உசாவ வேண்டும்.
4.2. இவ் வுசாவல் மன்றத்தின் தீர்ப்பு இறுதியாய்
இருக்கும். தீர்ப்புகள் உசாவல் மன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர்
முடிவுப்படி வழங்கப்படும்.
கி.
நயமன்றங்கள்
1 நய
மன்றங்கள் கூற்றம், கோட்டம், மாவட்டம், மாநிலம், மண்டலம், நாடு என்ற மட்டங்களில்
இயங்கும்.
2. குற்றவியல், உரிமையியல் வழக்குகளை ஒரே
நயமன்றமே உசாவும்.
3.1. நயமன்றத்துக்கு உறுப்பினர்களைக் குடவோலை முறையில் தேர்வு செய்ய
வேண்டும்.
3.2. நயமன்றத்துக்குப் போட்டியிடுவோர் முழுக்குடியுரிமை உள்ளவராக இருக்க
வேண்டும்.
3.2. 35 அகவை நிரம்பியவராக இருக்க வேண்டும்.
3.3. நயமன்ற உறுப்பினர்க்குரிய தேர்வில் தேறியவராக இருக்க வேண்டும்.
4.1. ஒவ்வொரு
ஊராட்சியிலுமிருந்து குடவோலை முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கூற்றத்திலுள்ள 5 ஊராட்சிகளிலுமிருந்து தேர்வாகிற ஐவரும் கூற்ற நயமன்ற
உறுப்பினர்களாக இருப்பர்.
4.2. கூற்ற நயமன்ற உறுப்பினர்களிலிருந்து கோட்ட நயமன்ற உறுப்பினர் ஐவரையும்
கோட்ட நயமன்ற உறுப்பினர்களிலிருந்து மாவட்ட நயமன்ற உறுப்பினர் ஐவரையும் மாவட்ட
நயமன்ற உறுப்பினர்களிலிருந்து மண்டல நயமன்ற உறுப்பினர் ஐவரையும் மண்டல நயமன்ற
உறுப்பினர்களிலிருந்து இந்திய நயமன்ற
உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5.1. ஒரு கூற்றத்தின்
எல்லைக்குள் உள்ள வழக்குகளை மட்டும் கூற்ற நயமன்றம் உசாவ முடியும். ஒரு கோட்ட
எல்லைக்குள் அடங்கிய வெவ்வேறு கூற்றங்களுக்கு இடையிலுள்ள வழக்குகளை அக் கோட்ட நயமன்றமும் ஒரு மாவட்டத்தில் அடங்கிய
வெவ்வேறு கோட்டங்களுக்கிடையிலுள்ள வழக்குகளை அம் மாவட்ட
நயமன்றமும் ஒரு மாநிலத்தினுள் அடங்கிய வெவ்வேறு மாவட்டங்களுக்கிடையிலான வழக்குகளை
மாநில நயமன்றமும் ஒரு மண்டலத்தினுள் அடங்கிய வெவ்வேறு மாநிலங்களிடையிலுள்ள
வழக்குகளை மண்டல நயமன்றமும் மண்டலங்களுக்கிடையிலான வழக்குகளை இந்திய நயமன்றமும்
உசாவும்.
கீ.பொது
1. ஆள்வினையாளர்கள், உசாவல் மன்ற உறுப்பினர்
நயமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மாதச் சம்பளமும் படிகளும் உண்டு.
2. குடியுரிமை
தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் தேர்தல்களை நடத்தவும் வட்டத்துக் கொன்றாகச்
செயற்படும் அலுவலகங்களைக் கொண்ட ஒரு விரிவான தேர்தல் ஆணையம் செயற்படும்.
3.1 தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரது செயற்பாடு மக்களுக்கு
நிறைவளிக்கவில்லையாயின் அவர்கள் தங்கள் வட்டத்திலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில்
தங்கள் கருத்தை உரிய படிவத்தில் தெரிவிக்கலாம். முழுக் குடியுரிமை
பெற்ற மக்களுக்குத்தாம் இந்த உரிமை உண்டு. குறிப்பிட்ட பதவிக்குரிய எல்லைக்குள்
உள்ள முழுக் குடியுரிமையுள்ள மக்களில் 35
நூற்றுமேனியர் இவ்வாறு கருத்து தெரிவித்தால் அந்தப் பதவியிலிருப்பவர் பதவி நீக்கம்
பெறுவார்.
3.2. இது போன்று எந்த ஒரு
பதவியிலிருப்போருக்கும் எதிராக வாக்களிக்குமாறு காத்திருப்போர் பட்டியலிலுள்ள
வேட்பாளர் தூண்டினால் அவரது பெயர் வரிசையிலிருந்து நீக்கப்படும்.
விளக்கக்
குறிப்புகள்.
1.
ஆள்வினையாளர்கள்,
உசாவல் மன்றம், நயமன்றம், அரசியல் சட்ட மன்றம் அனைத்துக்கும் தேர்தல் குடவோலை
முறையிலேயே நடைபெறும். ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை
அகரவரிசைப்படுத்தி எண்கள் கொடுத்து அவ் வெண்களைக்
கொண்ட ஒரே தோற்றமுள்ள வில்லைகளை ஒரு குடத்தினுள் இட்டு ஐந்து ஆண்டு அகவை நிரம்பிய
ஒரு குழந்தையைக் கொண்டு ஒவ்வொன்றாக அனைத்து வில்லைகளையும் வெளியிலெடுத்து அவ் வரிசையைப் பதிவு செய்வதுதான் இம்முறை.
2.
குடவோலை
முறையிலுள்ள நன்மைகள்.
2.1.
கட்சி
அரசியல் தேவையில்லை.
2.2.
அதனால்
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது.
2.3.
அப்படித்தான்
வாக்குப் பெறமுடியும் என்பதால் நாணயமற்ற எத்தர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும்,
அரசியலுக்கே வரமுடியும் எனும் நிலை அகலும்.
2.4.
வாக்கு
வங்கிக்காக மக்களை சாதி. சமயம், மொழி, நிலப்பரப்பு போன்ற அடிப்படைகளில்
பிளவுபடுத்திப் பகையை வளர்க்கத் தேவையில்லை.
2.5.
அரசியல்
கட்சி நடத்துவதற்கும் எதிரிகளிடமிருந்தும் போட்டியாளர்களிடமிருந்தும் அதனைக்
காப்பதற்கும் தேவைப்படும் பெருமளவு பணத்துக்காக நாட்டையும் மக்கள் நலன்களையும்
உள்நாட்டு, வெளிநாட்டு விசைகளிடம் அடகு
வைக்கத் தேவை இருக்காது. அதற்காக ஊழல்களிலும் ஈடுபடத் தேவையில்லை. அந்தச் சாக்கில்
அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களைக் கொள்ளையடிக்கவும் தேவையில்லை.
2.6.
கள்ள
வாக்குப் போடவும் வாக்காளர்களை மிரட்டவும் என்று குமுகப் பகைத்
தனிமங்களை உருவாக்குதல், ஏற்கனவே இருப்பவற்றை அரசியல் களத்தினுள் இறக்குதல்,
சிறையிலிருக்கும் போக்கிரிகளை விடுவித்துக் கொடுமை புரிதல் என்பதெல்லாம்
தேவைப்படாது.
2.7.
வாக்குகளைக்
கவர இலவயங்களை அறிவித்து மக்களை இரவலர் மனநிலைக்குத் தாழ்த்த முடியாது.
2.8.
வாக்குச்
சீட்டு முறையில் தேர்வு செய்யப்படுபவர் அவரை வேட்பாளராக நிறுத்திய கட்சித்
தலைமைக்குக் கட்டுப்பட்டவரேயன்றி அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குச் சட்டப்படி
கட்டுப்பட்டவர் அல்லர். ஆனால் குடவோலை முறையில் நாட்டின் சட்டம், தன் மனச்சான்று,
கடமை உணர்வு, மக்களின் நலன், அவர்களது வெறுப்புக்கு ஆளாக விரும்பாமை ஆகிய
காரணிகள்தாம் அவர்களைக் கட்டுப்படுத்தும்.
2.9.
வாக்குகளை
விலைக்கு வாங்கும் நோக்கத்துடன் கட்சித் தொண்டர்கள் எனும் அடியாட்கள் மூலம் பணம்
கொடுக்கும் நிகழ்முறையில் அந்த அடியாள்கள் தங்களுக்குக் கணிசமாக எடுத்துக் கொண்டு
எந்த உழைப்பும் இன்றி சொகுசாக வாழ்வதைப் பார்த்து மொத்தக் குமுகமே நேர்மை, நாணயம்,
உழைப்பு ஆகியவை மீது நம்பிக்கை இழப்பதை முடிவுக்குக் கொண்டுவரலாம்.
2.10. இன்றைய வாக்குச் சீட்டு தேர்தல்
முறையில் குமுகத்திலுள்ள மிகச் சிறந்த அறிவும் சிந்தனைத் திறனும் நேர்மையும்
கொள்கைப் பிடிப்பும் பொதுநல நோக்கும் தன்னலமறுப்பும் கொண்டவர்கள் திட்டமிட்டு
அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டு குமுகத்தின் கடைந்தெடுத்த கீழ்மையான தனிமங்களே
அனைத்துக் கட்சிகளின் தலைமை முதல் கடைசித் தொண்டர் வரை இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
குடவோலை முறையில் குமுகத்தில் உள்ள சராசரி விகிதத்தில் நல்லவர்களும்
அல்லாதவர்களும் தேர்வு பெறுவர்.
2.11. எவ்வித ஒதுக்கீடும் இன்றி
நிகழ்வாய்ப்பு (Probability) கோட்பாட்டின் படியும்
சகட்டுமேனித் தேர்வு (Random
Selection) முறையிலும்
குடிமக்களின் விகிதத்தில் பதவிகளின் பங்கீடும் அமையும்.
அ..இ அரசியல் சட்டம் வகுத்தல்
1.
முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த அரசியல் சட்டம் நடைமுறையில் இருக்கும்.
அதற்குள்,
1.1
நிலங்களில் குத்தகை முறையை ஒழித்து தொழில்முனைவு ஆர்வம் உள்ளோர் பங்கு
மூலதனம் திரட்டி நிலங்களை வாங்கி பெரும் பண்ணைகளை அமைக்க வேண்டும். அரசின்
தலையீடில்லாத கூட்டுறவு அமைப்புகளை அமைத்தும் இதைச் செய்யலாம்.
1.2. குறுந்தொழில், சில்லரை வாணிகம் ஆகிய துறைகளிலுள்ளோரும் இது போன்று அரசின் தலையீடில்லாத கூட்டுறவுகளாக
இணைந்து மக்களிடமிருந்து பங்கு மூலதனம் பெற்று சிறுதொழில்களையும் பல்பொருள் அங்காடிகளையும்
அமைக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்குப் பின்:
1.3.1.ஒவ்வொரு ஊராட்சியிலுமுள்ள
60 அகவைக்குட்டபட்ட, முதலீட்டாளர்களின் அரங்கங்களை அமைத்து அவர்களை தொழில் - வாணிகத்தில்
தங்கள் பட்டறிவின் அடிப்படையில் மாநில, நடுவண் அரசியல் சட்டங்களில்
தேவைப்படுவனவாகிய மாற்றங்களையோ அல்லது புது அரசியல் சட்டத்தையோ பரிந்துரைக்க
வேண்டும்
1.3.2.ஒவ்வொரு ஊராட்சியிலுமுள்ள
60 அகவை நிரம்பிய முழுக்
குடியுரிமையுள்ள மூத்த
குடிமக்கள் அரங்கங்களை அமைத்து அவர்கள் மாநில, நடுவண் அரசியல் சட்டங்களில் அவர்கள்
கருதும் மாற்றங்களையோ அல்லது புது அரசியல் சட்டத்தையோ பரிந்துரைக்க வேண்டும்.
1.3.3.ஒவ்வொரு வட்டத்திலுமுள்ள
வட்டம், கூற்றங்கள் அனைத்திலும் மற்றும் ஊராட்சிகளிலுள்ள ஆள்வினை மன்ற
உறுப்பினர்களும் ஓர் அரங்காகச் செயற்பட்டு தங்கள் பட்டறிவின் அடிப்படையில் மாநில,
நடுவண் அரசியல் சட்டத்தில் தேவைப்படும் மாற்றங்கள் அல்லது புதிய அரசியல் அமைப்புச்
சட்ட வரைவை முன்வைக்க வேண்டும்.
1.3.4.ஒவ்வொரு கோட்டத்திலுமுள்ள
உசாவல் மன்ற உறுப்பினர்களை ஓர் அரங்கமாக அமைத்து தங்கள் பட்டறிவின் அடிப்படையில்
மாநில, நடுவண் அரசியல் சட்டங்களில் தேவைப்படும் மாற்றங்கள் அல்லது புதிய அரசியல்
அமைப்புச் சட்ட வரைவை முன்வைக்க வேண்டும்.
1.3.5.ஒவ்வொரு கூற்றத்திலுமுள்ள
நயமன்ற உறுப்பினர்கள் ஓர் அரங்காகச் செயற்பட்டு தங்கள் பட்டறிவின் அடிப்படையில்
மாநில, நடுவண் அரசியல் சட்டங்களில் தேவைப்படும் மாற்றங்களை அல்லது புதிய அரசியல்
சட்ட வரைவை முன்வைக்க வேண்டும்.
1.3.6.ஒவ்வொரு கூற்றத்திலுமுள்ள
அரசு அலுவலர்கள் ஓர் அரங்காகச் செயற்பட்டு தங்கள் பட்டறிவின் அடிப்படையில் மாநில,
நடுவண் அரசியல் சட்டங்களில் தேவைப்படும் மாற்றங்களை அல்லது புதிய அரசியல் சட்ட
வரைவை முன்வைக்க வேண்டும்.
1.3.7.இந்த அரங்குகள்
எவற்றிலும் அடங்காத, முழுக்
குடியுரிமையுள்ள மக்களின்
அரங்குகளை ஊராட்சிக் கொன்றாக அமைத்து அவர்களும் மாநில, நடுவண் அரசியல் சட்டங்களில்
தேவைப்படும் மாற்றங்களை அல்லது புதிய அரசியல் சட்ட முன்வரைவை முன்வைக்க வேண்டும் .
1.4.1.அரசியல் சட்டமன்ற
உறுப்பினருக்குரிய தகுதித் தேர்வில் தேறிய 50 அகவை நிரம்பிய முழுக் குடியுரிமையுடையவர்களிலிருந்து ஊராட்சிக்கு
ஒருவரைக் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு வட்டத்துள் அடங்கிய ஊராட்சிகளிலிருந்து தேர்வானவர்கள்
அவ்வட்டத்திலுள்ள மேற்கூறிய அரங்கங்கள் முன்வைத்த கருத்துகளைத் தொகுத்து தம்
கருத்துகளையும் தனியாக முன்வைக்க வேண்டும்.
1.4.2.வட்ட அரசியல் சட்ட அரங்கு
ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வொருவர் மாநில அரசியல் சட்ட அரங்குக்குத்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவ்வாறு அமையும் மாநில அரசியல் சட்ட
அரங்கம் மாநில அரசியல் சட்டத்தையும் நடுவண் அரசியல் சட்டத்துக்குத் தான்
முன்னிடும் வரைவையும் இறுதி செய்யும்.
1.4.3.ஒவ்வொரு மாநில அரசியல்
சட்ட அரங்கிலிருந்தும் பத்துப் பேர் வீதம் குடவோலை முறையில் இந்திய அரசியல் சட்ட
அரங்குக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு அமையும் இந்திய அரசியல் சட்ட அரங்கு மாநில அரசியல் சட்ட
அரங்குகள் முன்வைத்த நடுவண் அரசியல் சட்ட வரைவுகளைத் தொகுத்தும் தம் கருத்துகளை
இணைத்தும் இந்திய அரசியல் சட்டத்தை இறுதி செய்யும். அவ்வாறு முன்வைக்கும் இந்திய
அரசியல் சட்டத்தில் பெரும்பான்மை மாநிலங்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக எந்த ஒரு
பிரிவும் இடம்பெறக் கூடாது.
அ. ஈ. அரசு மற்றும் மக்களுடைமை நிறுவன
ஊழியர்கள்.
1.
அரசு
ஊழியர்களாயினும் தனியார் எனப்படும் மக்களுடைமை நிறுவனங்களாயினும் ஊழியர் தேர்வு,
சம்பளம் ஆகியவை இந்த விதிகளின் படிதான் இருக்க வேண்டும். இந்த அரசியல் சட்டத்தின்
படி அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது.
1.1. ஒரு பணிக்கு வரையறுக்கப்பட்ட
தேர்வில் தேறிய முழுக் குடியுரிமையள்ள குடிமக்கள்
மட்டுமே உள்நாட்டில் அரசு மற்றும் மக்களுடைமை நிறுவனங்களில் மாதச் சம்பளத்துக்கு
வேலை செய்யத் தகுந்தவராவார். முழுக் குடியுரிமையில்லாதவர்
அற்றைக் கூலி வேலைகளில் மட்டுமே அமர்த்தப்படுவர். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள்
செய்யும் பணிக்கு அரசு நிறுவும் கூலிக்கு மேல் கொடுக்கக் கூடாது. ஒரு பணிக்கு
வரையறுக்கப்பட்ட தேர்வில் தேறியவர்களிலிருந்து குடவோலை முறையில்தான் பணியாளர்களைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
1.1.1.மக்களுடைமை நிறுவனங்களில்
பணியாளர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் இருப்பதாகத் தெரியவந்தால் அந் நிறுவனம் செயற்படும் நிலப் பரப்பைப் பொறுத்து ஊராட்சி, கூற்றம், வட்டம்,
கோட்டம், மாவட்டம், பைதிரம், மாநிலம், மண்டலம் அல்லது இந்திய ஆள்வினை அமைப்பு,
தானே ஊழியர் தேர்வை மேற்கொள்ளும். அதன் பின்னர் நிறுவனம் - ஊழியர் இடையிலான சிக்கல்களை
பங்கு முதலீட்டாளர்களின் மன்றம் கண்காணித்துக் கொள்ளும்.
1.2. அரசு ஊழியர்களாயினும் சரி மக்கள் துறை ஊழியர்களாயினும் சரி மிகக்
குறைந்த சம்பளத்துக்கும் மிக உயர்ந்த சம்பளத்துக்கும் உள்ள விகிதம் ஐந்தை மிஞ்சக்
கூடாது. இந்த ஒப்பீட்டை இரு குழுவினரையும் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும்.
1.2.1.சம்பளம் சராசரி மக்களின்
வருமானத்தை விட மூன்று மடங்குக்கு மேல் இருக்கக் கூடாது. குறைந்த சம்பளம் சராசரி
மக்களின் வருமானத்தைப் போல் 60% க்குக் குறையக் கூடாது.
1.2.2.அகவிலைப்படி என்று
எதுவும் இருக்கக் கூடாது. 5 ஆண்டுகளுக்கொரு முறை வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள
மாற்றத்தையும் மக்களுடைய வருமானத்தையும் கணக்கில் கொண்டு சம்பளத்தை ஏற்றவோ இறக்கவோ
செய்ய வேண்டும்.
1.2.2.1.மக்களுடைமை
நிறுவனங்களின் ஆதாயம் பெருகி அதன் விளைவாக சம்பளத்திலும் பிற வசதிகளிலும்
மேம்பாட்டின் மூலமோ இலவயப் பங்குகள் வாயிலாகவோ ஊழியர்கள் பயனடைந்தால் ஒட்டு
மொத்தமாக அந்தந்த மாநிலத்தைக் கணக்கிலெடுத்து அதே அளவுக்கு அரசூழியர் சம்பளத்தை
உயர்த்தலாம்.
1.2.3.. பயணப்படி இப்போதுள்ள விதிகளின் படியே
வழங்கலாம்.
1.2.4. ஓய்வூதியத்துக்கென்று அரசோ மக்களுடைமை நிறுவனங்களோ ஊழியர்களுக்கென்று
எதையும் வழங்கக் கூடாது. ஆனால் அவர்களின் சம்பளத்திலிருந்து 10% தொகையைப்
பிடித்தம் செய்து அதற்கேற்ப ஒய்வூதியப் பயன்களை வரையறுக்க வேண்டும்.
அ.உ.
சட்டங்கள்
1.1 சாதி, சமய, வட்டார மரபுச்
சட்டங்கள் என்று சட்டத்தில் மக்கள் குழுக்களுக்குள் வேறுபாடு காட்டக் கூடாது.
1.2 ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்திய அரசியல் அமைப்புக்கு இசைய
தனித்தனிச் சட்டங்களை அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ள வேண்டும்.
1.3 மண்டல, இந்திய நயமன்ற வழக்குகளில் அந்தந்த மாநிலச் சட்டங்களுக்கும்
இந்திய அரசியல் சட்டத்துக்கும் ஏற்ப உசாவல் நடைபெற வேண்டும்.
அ. ஊ.
பொது
1.
அரசு
மற்றும் மக்களுடைமை நிறுவன ஊழியர்கள் ஆள்வினை, உசாவல், நயன்மை மன்றங்கள், அரசியல் சட்ட
அரங்கு ஆகியவற்றில் உறுப்பினராக விரும்பினால் அவற்றில் ஏதாவதொன்றுக்குத் தேர்வான
உடனேயே தன் ஊழியர் பதவியை இழந்தவராவார். மீண்டும் அப் பதவி
அவருக்குக் கிடைக்காது.
புதிதாக வேலை தேடிக்கொள்ள வேண்டும்.
2.
மேற்கூறிய
மன்றங்கள் மற்றும் அரங்குகளில் எவரும் ஒரே நேரத்தில் ஒரு பதவியில் மட்டுமே இருக்க
முடியும்.
3.
தன்
வாழ்நாளில் ஒருவர் மேற்கூறிய மன்றங்கள் மற்றும் அரங்குகளில் சேர்த்து மொத்தம் இரு முறைதான்
பங்கேற்க முடியும்.
4.
57
அகவைக்குப் பின்னர் ஒருவர் மேற்கூறிய மன்றங்கள் மற்றும் அரங்குகளில் பங்கேற்கப்
போட்டியிட முடியாது.
5.
மன்றங்கள்
மற்றும் அரங்கங்களில் பங்கேற்போர் அரசூழியர்களாகவே மதிக்கப்படுவர்.
அரசூழியர்களுக்குரிய சலுகைகளும் கட்டுப்பாடுகளும் இவர்களுக்கும் உண்டு.
6.
அரசூழியர்களோ
மக்களுடைமை ஊழியர்களோ செய்யும் தவறுகளால் தனிமனிதர்களுக்கோ பொதுமக்களுக்கோ பொதுச்
சொத்துகளுக்கோ ஏற்படும் இழப்புகளுக்கு ஈடும் தவற்றுக்குரிய தண்டனையும் கட்டாயம்
வழங்க வேண்டும். அதை நிறைவேற்றத் தவறும் மேல்நிலை அலுவலர்கள் அல்லது மேல்நிலை மன்ற
உறுப்பினர்கள் அதே ஈட்டுக்குப் பொறுப்பாவார்கள். தண்டனைக்கும் உள்ளாவார்கள்.
அ.எ. அரசின் திட்டங்களும் வரவு-செலவுக்
கணக்குகளும்.
1.
ஒவ்வொரு
கணக்கு ஆண்டு முடிந்ததும் ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள முழுக் குடியுரிமையுள்ள மக்கள் நேரடியாகப் பங்கு
கொள்ளும் ஊர்க்கூட்டம் கட்டாயம் கூட்டப்பட வேண்டும்.
2.
கழிந்த
ஆண்டில் ஊராட்சியில் நடைபெற்ற அனைத்துப் பணிகளையும் அவற்றுக்கான செலவுகளையும்
பற்றிய விரிவான அறிக்கையை ஊர்க்
கூட்டத்தின் முன்வைத்து அதன்
ஒப்புதலைப் பெற வேண்டும்.
3.
அடுத்த
ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், அவற்றுக்கு ஆகும்
என்று கணிக்கப்பட்ட செலவு, ஊராட்சியின் வரி வருமானம் போகத் தேவைப்படும் பணம்
முதலியவற்றையும் ஊர்க் கூட்டத்தின் முன்வைத்து
ஒப்புதல் பெற வேண்டும். கழிந்த ஆண்டில் தன் ஆட்சி எல்லைக்குள் நடைபெற்ற
விளைப்புகள், அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கத்தக்க விளைப்புகள் ஆகியவை பற்றிய ஒரு
நம்பகமான அறிக்கையையும் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.
4.
தம்
எல்லைக்குள் அமைந்துள்ள ஊராட்சிகளின் வரவு - செலவுத் திட்டங்களையும் விளைப்பு
குறித்த கணக்குகளையும் கணிப்புகளையும் தொகுத்து ஒவ்வொரு மாநில அரசும் தனது
நேரடியான திட்டங்களுக்கும் ஆள்வினைச் செலவுகளுக்கும் வேண்டிய பணத்தில்
ஊராட்சிகளிலிருந்து கிடைக்கவிருப்பது போக நடுவரசு எவ்வளவு தரவேண்டியிருக்கும்
என்பவை குறித்த வரவு - செலவு அறிக்கையையும் நடுவரசுக்கும் ஊராட்சிகளுக்கும்
விடுத்துவைக்க வேண்டும்.
5.
மாநிலங்களிலிருந்து
வரும் அறிக்கைகளைத் தொகுத்து, தான் நேரடியாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள்,
நடைமுறைச் செலவினங்கள் ஆகியவற்றோடு மாநிலங்கள் வழியாக வந்த செலவினங்களையும்
தொகுத்து அவற்றின் மொத்தத்தில் அவற்றின் வருமானங்கள் போக நடுவரசு அச்சிட்டு வழங்க
வேண்டிய தொகையை, அடுத்த ஆண்டு எதிர்பார்க்கத்தக்க மொத்த விளைப்புடன் ஒப்பிட்டு
பணவீக்கமோ பண்டங்களின் தேக்கமோ ஏற்படாத வகையில் முடிவு செய்து ஒவ்வொரு
ஊராட்சிக்கும் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை இறுதி செய்து கழிந்த
ஆண்டு நடுவரசின் செலவுக் கணக்கையும் மாநிலங்கள் மூலம் அந்தந்த ஊராட்சிக்கு
விடுத்து வைக்கும். ஊராட்சிகள் மீண்டும் ஊர்க் கூட்டம்
நடத்தி நடுவரசு இறுதி செய்த அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு
ஒப்புதல் அளித்து மாநில, நடு அரசுகளின் கழிந்த ஆண்டு வரவு - செலவுக் கணக்கை ஆய்வு
செய்து தங்கள் ஆய்வு முடிவுகளையும் சேர்ந்து மாநில அரசுக்கு விடுத்து வைக்கும்.
6. ஊர்க் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முழுக் குடியுரிமையுள்ள குடிமக்களுக்கு உரிய தண்டம்
விதிக்கப்படும்.
7. குடிமைவரி,
நிலவரி, சொத்துவரி, விளைப்புவரி, சுங்கவரி, ஆவணப் பதிவுவரி போன்ற அடிப்படை வரிகள்
ஊராட்சிகளின் வருவாயாக இருக்கும். ஊர்திவரி பாசனவரி போன்றவை மாநிலங்களின் வருவாயாக
இருக்கும். ஊராட்சிகள் தங்கள் வரி வருவாயின் ஒரு குறிப்பிட்ட பங்கை மாநில அரசின்
வழியாக நடுவரசுக்கு வழங்கும். அது போல் மாநிலங்களும் தங்கள் வரி வருவாயில் ஒரு
பகுதியை நடுவரசுக்கு வழங்கும். நடுவரசுக்கு வரி தண்டும் அதிகாரம் எதுவும் இருக்காது.
அ.ஏ.
ஊராட்சிகள் மக்கள் ஆட்சியின் அடிப்படை ஒன்றிகள்.
1. ஊராட்சிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல்
ஊர்க் கூட்டங்களை நடத்த வேண்டும்.
2. ஊர்க் கூட்டத்தில் அவ் வூர் எல்லைக்குள் அதன்
குடிமக்களாக இருக்கும் 18 அகவை நிறைந்த ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். கலந்து
கொள்ளாதவர் அதற்கான காரணங்களைத் தெரிவித்து
கலந்துகொள்ளாததற்குரிய பிழையையும் செலுத்த வேண்டும்.
3. இரண்டு ஊர்க் கூட்டங்கள் தகுந்த காரணமில்லாமல் கலந்து கொள்ளத் தவறுபவர்
தன் முழுக் குடியுரிமையை இழப்பார். மீண்டும் முழுக் குடியுரிமை பெற வேண்டுமாயின் ஊர்க்
கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டு பிழையும் செலுத்த வேண்டும்.
4. இரண்டாம் முறையும் தவறுபவருக்கு மீண்டும் முழுக் குடியுரிமை கிடைக்காது.
5. ஊர்க் கூட்டங்களில் முகாமையாக முடிவு செய்யப்பட நாட்டின் ஆள்வினையில்
நிகழும் தவறுகளுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்கத் தவறினால் அவற்றைச் சுட்டிகாட்டி
உரிய அதிகாரம் படைத்தவருக்கு அறிவுறுத்தும் தீர்மானங்களை இயற்றி அது குறித்து எடுக்கப்படும்
நடவடிக்கைகளைக் கண்காணிக வேண்டும்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக