31.10.15

சிலப்பதிகாரப் புதையல் - 5


3. அரங்கேற்றுக்காதை
          தெய்வ மால்வரைத் திருமுனி யருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
5.     சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை
        ஆடலும் பாடலும் அழகும் என்றிக்
        கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்
10.   ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டிற்
  சூழ்கழன் மன்னற்குக் காட்டல் வேண்டி
  இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
  பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
  பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்
15.   விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு
  ஆடலும் பாடலும் பாணியுந் தூக்குங்
  கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
  பிண்டியும் பிணையலும் எழிற்கையுந் தொழிற்கையுங்
  கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்
20.    கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
  வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்
         பிண்டிசெய்தகை ஆடலிற் களைதலும்
  ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
  குரவையும் வரியும் விரவல செலுத்தி
25.    ஆடற் கமைந்த ஆசான் தன்னொடும்
  யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந்
  தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின்
  இசைந்த பாடல் இசையுடன் படுத்து
  வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
30.   தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்
  தேசிகத் திருவின் ஓசை யெல்லாம்
  ஆசின் றுணர்ந்த அறிவின னாகிக்
  கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
  பகுதிப் பாடலுங் கொளுத்துங் காலை
35.    வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
  அசையா மரபின் இசையோன் றானும்
   இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
  தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
  வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
40.    நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து
  இசையோன் வக்கிரித் திட்டதை யுணர்ந்தாங்கு
  அசையா மரபி னதுபட வைத்து
  மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து
  நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும்
45.    ஆடல் பாடல் இசையே தமிழே
  பண்ணே பாணி தூக்கே முடமே
  தேசிகம் என்றிவை ஆசி னுணர்ந்து
  கூடை நிலத்தைக் குறைவின்று மிகுந்தாங்கு
  வார நிலத்தை வாங்குபு வாங்கி
50.    வாங்கிய வாரத்து யாழும் குழலும்
  ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
  கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி
  ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
  சித்திரக் கரணஞ் சிதைவின்று செலுத்தும்
55.    அத்தகு தண்ணுமை அருந்தொழின் முதல்வனுஞ்
  சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
  புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
  வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு
  ஏற்றிய குரலிளி என்றிரு நரம்பின்
60.    ஒப்பக் கேட்கும் உணர்வின னாகிப்
  பண்ணமை முழவின் கண்ணெறி யறிந்து
  தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி
  வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு
  இசையோன் பாடிய இசையி னியற்கை
65.   வந்தது வளர்த்து வருவது ஒற்றி
  இன்புற இயக்கி இசைபட வைத்து
  வார நிலத்தைக் கேடின்று வளர்த்தாங்கு
  ஈர நிலத்தின் எழுத்தெழுத் தாக
  வழுவின்று இசைக்குங் குழலோன் றானும்
70.   ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்
        ஒரேழ் பாலை நிறுத்தல் வேண்டி
        வன்மையிற் கிடந்த தார பாகமும்
        மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
        மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
75.   கைக்கிளை யொழிந்த பாகமும் பொற்புடைத்
  தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
  கிளைவழிப் பட்டன ளாங்கே கிளையுந்
   தன்கிளை அழிவுகண் டவள்வயிற் சேர
  ஏனை மகளிருங் கிளைவழிச் சேர
80.   மேலது உழையிளி கீழது கைக்கிளை
        வம்புறு மரபிற் செம்பாலை யாயது
         இறுதி யாதி யாக ஆங்கவை
        பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
        படுமலை செவ்வழி பகரரும் பாலையெனக்
85.   குரல்குர லாகத் தற்கிழமை திரிந்தபின்
  முன்னதன் வகையே முறைமையில் திரிந்தாங்கு
  இளிமுத லாகிய எதிர்படு கிழமையுங்
  கோடி விளரி மேற்செம் பாலையென
   நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
90.    இணைநரம் புடையன அணைவுறக் கொண்டாங்கு
யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழன்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவுஞ் சமனு மெல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்
95.   எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்குங்
100.  கோலள விருபத்து நால்விர லாக
எழுகோ லகலத் தெண்கோல் நீளத்
தொருகோல் உயரத் துறுப்பின தாகி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
105.  ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப்
பூதரை யெழுதி மேனிலை வைத்துத்
தூண்நிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியுங்
110.  கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
        ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
        மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
        விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த
115. சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு
கண்ணிடை நவமணி யொழுக்கி மண்ணிய                                                                 
 நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்த னாகென
120.  வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்                                                                  
புண்ணிய நன்னீர் பொற்குடந் தேந்தி
மண்ணிய பின்னர் மாலை யணிந்து
நலந்தரு நாளாற் பொலம்பூண் ஓடை
         அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு
125.  முரசெழுந் தியம்பப் பல்லிய மார்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவுந்                                                                        
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங்கு
130.  இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருத்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொன்னெறி இயற்கைத் தோரிய மகளிரும்
135.  சீரியல் பொலிய நீரல நீங்க
வாரம் இரண்டும் வரிசையிற் பாடப்
         பாடிய வாரத்து ஈற்றின்நின் றிசைக்குங்
         கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங்
         குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
140.  தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
         பின்வழி நின்றது முழவே முழவொடு
         கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
         ஆமந் திரிகையோ டந்தர மின்றிக்
        கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக்
145.  கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி                              
         வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
150.  நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து
        மூன்றளந் தொன்று கொட்டி அதனை                                                                      
         ஐதுமண் டிலத்தாற் கூடை போக்கி
        வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை
        ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
155.  கூறிய ஐந்தின் கொள்கை போலப்                                       
         பின்னையும் அம்முறை பேரிய பின்றைப்
         பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
         நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்
         காட்டினள் ஆதலிற் காவல் வேந்தன்
160.  இலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத்
        தலைக்கோல்  எய்தித் தலையரங் கேறி
        விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு
        ஒருமுறையாகப் பெற்றனள் அதுவே
        நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த
165. வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை                                            
        மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென
        மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து
        நகர நம்பியர் திரிதரு மறுகிற்
        பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
170.  மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
        கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு                                                                      
         மணமனை புக்கு மாதவி தன்னோடு                                                                        
         அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி                                                           
         விடுத லறியா விருப்பின னாயினன்
         வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென்.                                                                    

வெண்பா

எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
         வாக்கினால் ஆடரங்கில் வந்து.

பொழிப்புரை
தெய்வத் தன்மையுடைய பெரிய மலையாகிய பொதிய மலையின் திருமுனியாகிய அகத்தியர் வாக்கினால் இந்திரன் மகனோடு தலைக்கோல் பெற்றுச் சாபம் நீங்கிய உருப்பசியின் சிறப்பிலும் குறையாத, தொழில் திறத்தில் குன்றாத குலத்தில் பிறந்த பெரிய தோளையுடைய மடந்தையாகிய தாது விரியும் பூக்களை அணிந்த கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவியை ஆடலிலும் பாடலிலும் அழகிலும் என்ற இம் மூன்றில் ஒன்றும் குறைவுபடாமல் ஏழாண்டுகள் பயிற்றி அவளது பன்னிரண்டாம் அகவையில் கழலணிந்த மன்னருக்குக் காட்டல் வேண்டி,

1. ஆடலாசிரியன்:
அகக்கூத்து, புறக்கூத்து என்ற இருவகைக் கூத்துகளின் இலக்கணம் அறிந்து, அவற்றின் பகுதிகளாகிய பல கூத்துகளையும் விலக்குறுப்புகளுடன் புணர்க்க வல்லனாய், அல்லியம் முதல் கொடுகொட்டி ஈறாக உள்ள தெய்வ விருத்தியாகிய பதினொரு கூத்துகளையும் அக் கூத்துகளின் விரிவகைகளுக்கு எல்லாம் அமைந்த வாச்சியங்களின் கூறுகளையும் அவ் வவற்றுக்குரிய நூல்களின் வழியே விளங்க அறிந்து ஆடலும் பாடலும் தாளங்களும் தாளங்களின் வழிவரும் எழுவகைத் தூக்குகளும் கூடியவாறு ஆடல் நிகழ்த்துமிடத்து பிண்டி எனப்படும் ஒற்றைக்கை, பிணையல் எனப்படும் இரட்டைக்கை என்பனவற்றை எழிற்கையாகவும் தொழிற்கையாகவும் கையாளும் வகையறிந்து ஒற்றைக்கை வரவேண்டிய இடத்தில் இரட்டைக்கையோ இரட்டைக்கை வரவேண்டிய இடத்தில் ஒற்றைக்கையோ தொழிற்கை வரவேண்டிய இடத்தில் எழிற்கையோ எழிற்கை வரவேண்டிய இடத்தில் தொழிற்கையோ வராமல் ஆடல் நிகழும் போது அவிநயம் நிகழாமலும் அவிநம் நிகழும் போது ஆடல் நிகழாமலும் ஒருவரியற்றும் வரியும் குழுவாயியற்றும் குரவையும் தம்முள் விரவாமல் கொண்டு செல்லும் ஆடலாசானும்

2. இசையாசிரியன்:
யாழிசையும் குழலிசையும் தாளவகைகளும் வாய்ப்பாட்டும் மந்தமான சுரத்தினையுடைய தண்ணுமையும் கூத்துகளும் வல்லவனாய் இவற்றுக்குப் பொருத்தமான பாடல்களை இசைகளுடன் சேர்த்து இசையமைத்து பாட்டுக்கும் கூத்துக்கும் உரிய பொருளை இயக்கி - அதாவது பாட்டின் நடைகளைக் கொண்டு இயக்கி பல்வேறு தேசங்களின் மொழிகளை அறிந்து அம் மொழிகளில் இசையமையும் விதத்தையும் அறிந்து இயற்புலவன் கருத்தும் ஆடல் தொகுப்பும் பாடல்களும் இணைக்கும் போது குற்றமற்ற  வகையில் வகுக்கவும் விரிக்கவும் வல்ல நல்மரபுள்ள இசையாசிரியனும்

3. புலவன்:        
 ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த புவியின் கண் தமிழ்நாட்டினர் அறிய முத்தமிழும் துறைபோகக் கற்றுணர்ந்து வேத்தியல் பொதுவியல் எனும் இரு பிரிவினையுடைய நாடக நூலை நன்கு கடைப்பிடித்து இசைப்புலவன் ஆளந்தி செய்ததை பண்ணின்  தன்மையை உணர்ந்து அதற்கேற்ப அவன் தாளநிலை எய்தவைத்த திறம் தன் பாடலில் தோன்றவைத்து, முன் தன் போட்டியாளர்கள் வைத்த திறனாய்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு இடமில்லாதபடி சொற்பிறழாத மொழியால் பாடல் இயற்ற வல்ல நூற்புலவனும்

4. தண்ணுமையாசிரியன்.
எல்லாக் கூத்துகளும் எல்லாப் பாட்டுகளும் எல்லா இசைகளும் இயல், இசை, நாடகமென்னும் மூவகைத் தமிழ்களும் எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குகளும் அவற்றின் குற்றங்களும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொல்வழக்குகளையும் ஐயமின்றி உணர்ந்து ஓர் உருவை இரட்டிக்கிரட்டி சேர்த்த இடத்து நெகிழாமல் நிறுத்தவும் அவ்வாறு உருவான இரட்டியைப் பாகவுருவானவழி நிற்கும் வழியில் நிறுத்தவும் கழிக்கும் வழியில் கழிக்கவும் வல்லவனும் இவ்வாறு நிகழ்த்திய உருக்களில் யாழ்ப்பாடலும் குழலின் பாடலும் கண்டப் பாடலும் கேட்போர் செவியில் இசைந்து நடக்குமாறு விரலின் செய்கையாலே குறியறிந்து சேர இசைக்க வல்லவனும் மற்றக் கருவிகளின் குறையை நிரப்புதலும் மிகுதியை அடக்குதலும் அவ்வாறு ஆக்குமிடத்தும் அடக்குமிடத்தும் இசையில் ஏற்ற இறக்கம் தோன்றாமல் செய்யவும் இவ் வனைத்தும் செய்யுமிடத்துக் கைத்தொழில் அழகு பெறச் செய்து காட்டவும் வல்லவனாகிய தண்ணுமைக் கருவியில் தொழில் வல்ல தண்ணுமை ஆசிரியனும்,
5. குழலாசிரியன்:
நூல்களில் சொல்லியவாறு இசை கொள்ளும் எழுத்துகளின் மேலே வல்லொற்றுகள் வந்த வழி மெல்லொற்றுப் போல பண்ணை வடித்தல் ஆகிய சித்திரப் புணர்ப்பையும் இசைகொள்ளா எழுத்துகளின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்த்தும் வஞ்சனைப் புணர்ப்பையும் நுண்மையாக அறிந்து புணர்க்கும் பாடலாசிரியனை ஒத்த அறிவுடையவனாகி ஆரோகண அவரோகணங்களை சுட்டுவிரல் முதலாக சிறுவிரல் ஈறாக ஏற்றி இறக்கலும் இறக்கி ஏற்றலும் எனும் நான்கிலும் பண்களின் தன்மைகளை நிலைகுலையாமல் காட்டவல்லவனாய் குரல் நரம்பு இரட்டிக்கவரும் அரும்பாலையையும் இளி நரம்பு இரட்டிக்கவரும் மேற்செம்பாலையையும் இவை அல்லாத பாலைகளையும் இசை நூல் வழக்காலே இணை நரம்பு தொடுத்துப் பாடும் அறிவினையும் உடையவனாய் பண் உருவாக்கும் முழவின் நெறியினை அறிந்து தண்ணுமை ஆசிரியனுடன் பொருந்தி எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாகிய இளியெனும் நரம்பினை யாழ் மேல் வைத்து அதன் வழியே இசையாசிரியன் பாடிய பாட்டினியல்பைப் பாடுகின்ற பண்வரவுகளுக்குச் சுரம் குறைவுபடாமல் நிறுத்தி அந்தப் பண்ணுக்கு அயல் விரவாமல் நோக்கி வண்ணம் முதலாகக் காட்டப்பட்ட பாடலியல் வழக்கெல்லாம் சுவை பொருந்த நிரம்பக் காட்டி மேற்கூறிய முதலும் முறையும் முதலான பண்ணிலக்கணம் பதினொன்றினையும் நிரம்பவைத்து முதனடை, வாரம், கூடை, திரள் என்று சொல்லப்பட்ட இயக்கம் நான்கினுள் இடைப்பட்ட வாரப் பாடல் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடைத்தாதலாலும் வாரப் பாடலை அளவு நிரம்ப நிறுத்த வல்லனாய் அவ்வாறு நிறுத்தும் போது சொல்லியல்புகள் சிதையாமலே எழுத்தெழுத்தாக வழுவின்றி இலக்கணப்படி இசைக்கும் குழலாசிரியனும்,
                                             
6. யாழாசிரியன் 
          செவ்விய முறையிலே இரண்டு ஏழாகத் தொடுக்கப்பட்ட ஆயப் பாலையாய் நின்ற பதினால்க் கோவையில் செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை அரும்பாலை, கோடிப் பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை எனப்பட்ட ஏழு பாலையினையும் இணைநரம்பு தொடுத்து நிறுத்திக் காட்டல் காரணமாக,
            இப்பாலையின் முடிவுத்தானமாய் வலிந்த நிலையினை உடைய தாரம் பெற்ற இரண்டலகில் ஓரலகையும்
முதல் தானமாய் மெலிவில் நிற்கும் குரல் நரம்பு பெற்ற நான்கு அலகில் இரண்டு அலகையும்
            தார நரம்பில் அந்தரக் கோலிலே கைக்கிளையாக நிறுத்தத் தாரம்தான் கைக்கிளையாயிற்று;
            தளராத அழகுடைய தார நரம்பில் ஒழிந்த ஓர் அலகையும் விளரிக்குத்தர அவ்விளரி துத்த நரம்பாயிற்று;
            அம் முறையே இளியும் தன் கிளையாகிய குரலின் அழிவினைக் கண்டு அதன்பால் சேரவும்
            ஏனைய உழை முதலாயினவும் தத்தமக்குக் கிளை ஆகியவற்றில் சேரவும் இவ் வாறாகிய பதினால்க் கோவையிலே,
            உழை முதலாக கைக்கிளை இறுதியாக மெலிவு நான்கும் சமம் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் புதுமை உற்ற முறையாலே உழை குரலாகச் செம்பாலை ஆனது;
            இறுதியாய் நின்ற கைக்கிளை முதலாக உள்ள கைக்கிளை, துத்தம், குரல் என்னும் அவை தாம் தோன்றிய இடத்தின் முறையான இயல்பிலிருந்தும் நீங்காது,
            கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலையும் துத்தம் குரலாகச் செவ்வழிப் பாலையும் குரல் குரலாக அரும்பாலையும் என முறையே திரிந்த பின்,
            முன் போலவே முறைமையில் வேறுபட்டு,
            தாரம், விளரி, இளி என்பவையும்
            தாரம் குரலாக கோடிப்பாலையும் விளரி குரலாக விளரிப்பாலையும் இளி குரலாக மேற்செம்பாலையும் எனத் திரிய,
            நெடியவாய்க் கிடந்த சுரங்களின் இடத்தே, முதலும் இறுதியும் ஆகவுள்ள நரம்புகளைப் பொருந்தக் கொண்டு, யாழின் இடத்து அரும்பாலை முதலாயின இடமுறை மெலியவும்
            குழலின் இடத்துக் கோடிப்பாலை முதலாயின வலமுறை மெலியவும்
            வலிவும் மெலிவும் சமனும்  விளங்கவும் நரம்பு அடைவு கெடாமலும் பண்ணீர்மை (பண்ணின் தன்மை) முதலாயின குன்றாமலும் எழுத்துகளால் இசை செய்ய வல்ல யாழாசிரியனும்,  
7. அரங்கின் அமைப்பு:
          மனைநூலார் வகுத்த இயல்புகளில் வழுவாத வகையான அரங்கம் இயற்றுவதற்குக் குற்றம் இல்லாத ஓரிடத்திலே நிலம் ஒதுக்கி பொதியில் முதலாகிய புண்ணிய மலைப் பகுதிகளில் நீண்டு வளர்ந்த மூங்கிலில் கண்ணொடு கண் (ஒரு கணு) ஒரு சாணாக வளர்ந்த மூங்கிலைக் கொண்டு இருப்பத்து நான்கு விரல் நீளத்தை ஒரு கோலாக நறுக்கி  அடி அதாவது 85 செ.மீ. நீளம் கொண்ட அக் கோலால் 7 கோல் அகலமும் (அடி5.87 மீ.)  8 கோல் நீளமும் (22 அடி6.71 மீ.) ஒரு கோல் உயரத்தில் ( அடி 85 செ.மீ.) தளமும் அமைத்து தூணின் மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்துக்கு இட்ட பலகைக்கும் இடை நின்ற உயரம் நான்கு கோல் அளவாகவும் (11 அடி3.35மீ.) அதற்குப் பொருத்தமான பக்க வாயில்கள் இரண்டும் விளங்க இயற்றப்பட்ட அரங்கில் நால்வகைப் பூதரையும் வரைந்து தொழுதற்கு ஏற்ற உயர்ந்த இடத்தில் வைத்து  தூண்களின் நிழல்கள் அரங்குக்கு உள்ளும் அவையுள்ளும் விழாமல் வெளியில் விழுமாறு சிறந்த விளக்கமைப்பை ஏற்படுத்தி ஒரு பக்கத்திலிருந்து உருவும் (இழுக்கும்) ஒரு முகத் திரையும் எதிர் எதிர் பக்கங்களிலிருந்து உருவும் பொருமுகத் திரையும் நிகழ்த்து மாந்தர்கள் வெளித்தோன்றாமல் நடமாடவும் அமரவும் பயன்படும் கரந்துவரல் திரையும் அமைத்து ஓவிய மேற்கட்டு அமைத்து முத்தால் அமைந்த வளையங்கள்(சரி), தொங்கல்கள்(தூக்கு), நாற்றிகள்(தாமம்) ஆகியவற்றைத் தொங்விட்டு புதுமை பெற இயற்றப்பட்ட அரிய தொழிலமைந்த அரங்கினுள்ளே,

8. தலைக்கோல்: 
புகழ்பெற்ற பகையரசர்கள் போரில் புறமுதுகிட்டோடும் போது பறிக்கப்பட்ட அழகிய வெண்கொற்றக் குடையின் காம்பைச் சிதையாமல் எடுத்து கணுக்கள் தோறும் நவமணிகளைப் பொருத்தி கணுக்களுக்கு இடையில் சம்பூநதம் எனும் உயர்வகைத் தூய தங்கத் தகட்டைப் பொதிந்து அரசனின் அரண்மனையாகிய கோயிலில் வைத்து இந்திரன் மகன் சயந்தனாக அதனை நினைத்து முறையாக வழிப்படப்படும் தலைக்கோலை பொற்குடத்தில் ஏந்திய புண்ணிய ஆறுகளின் நீரால் ஆடலாசிரியன் முதலானோர் கழுவி அதற்கு மாலைகளும் சூட்டி பொருத்தமான நல்ல நாளிலே பொன்னணிகள் பூண்ட பட்டத்து யானையின் பெரிய கையிலே வாழ்த்திக் கொடுத்து அதனுடன் முரசம் இயம்பவும் பல இசைக் கருவிகளும் ஒலிக்கவும் அரசனும் அமைச்சர், புரோகிதர், சேனாபதியார், தூதுவர், சாரணர் எனும் ஐம்பெருங் குழுவினரும் உடன்வர தேரில் வலம் வந்த புலவன் கையில் யானை கொடுக்க அவர்கள் அதனை ஊர்வலம் செய்து அரங்கினுள் புகுந்து முன்புறம் வைத்தனர்.
           
அரசன் முதலானோர் தத்தம் தகுதிக்கேற்ப வகுக்கப்பட்ட இருக்கை முறைமையால் இருந்தபின் இசைக் கருவிகளை இசைக்கும் குயிலுவர்கள் அவர்கள் நிற்க வேண்டிய நெறிப்படியுள்ள இடத்தில் நிற்க அரங்கேறும் நாடகக் கணிகையாகிய மாதவி தன் வலக்காலை அரங்கிலே முன்வைத்து ஏறி வலப்புறத் தூண் பக்கம் செல்லுதல் என்ற முறைப்படி சென்று அதே முறைப்படி இடப்புறத் தூணைச் சேர்ந்து நின்ற பழைய மரபைச் சேர்ந்த முதிய கணிகையராகிய தோரிய மடந்தையருடன் இணைந்து நன்மை ஓங்கவும் தீமை நீங்கவும் வேண்டி ஓரொற்று வாரம் ஈரொற்று வாரம் எனும் தெய்வப்பாடல் இரண்டினையும் முறையாகப் பாடி, பாடிய தெய்வப் பாடலின் இறுதியில் இசைக் கருவிகள் இசைத்த வரிசை: குழல் தொடங்க அதற்கிசைய யாழ் தொடர்ந்தது; யாழின் வழியில் தண்ணுமை (மத்தளம்) தொடர்ந்தது. மத்தளத்தைத் தொடர்ந்து முழவு, முழவொடு ஆமந்திரிகை எனப்படும் தம்பட்டம், அதனுடன் வேறுபாடின்றி ஒரு தாளத்துக்கு இரண்டு பற்றாக ஐந்து தாளத்துக்குப் பத்தும் தீர்வு ஒன்றுமாக பதினொரு பற்றாலே தேசிக் கூத்தை ஆடிமுடித்து இவ்வாறு நாடக நூல்களில் அமைந்த முறைகளில் தவறு நேராமல் அந்தரக் கொட்டு என்றும் முகம் என்றும் ஒத்து என்றும் கூறப்படும் நிகழ்ச்சியை நிகழ்த்திய பின் பாலைப் பண்ணை அளவு மாறாதவாறு ஆளத்தியில் வைத்து அதன்மேல் மங்கலச் சொல்லினை உடைத்தாய் நாலுறுப்பும்(உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை)  குறைபாடில்லாத உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி மூன்று ஒத்துடைய மட்டத்திலே எடுத்து ஓரொத்துடைய ஏக தாளத்திலே முடித்து அழகிய மண்டில நிலையாலே தேசிக்குரிய கூறெல்லாம் ஆடி முடித்து,
           
            பஞ்ச தாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட வடுகில் ஒத்தையும் தேசியில் ஒத்தைக் காட்டினாற் போல் இரட்டிக் கிரட்டியாக ஆடி முன் சொல்லிய தேசியைப் போல் வரும் மட்டத்தாளம் முதல் ஏகதாளம் ஈறாக ஆடி முடித்த பின்னர் பொன்னாலான பூங்கொடியானது கூத்து நடித்தாற்போல் தாண்டவம், நிருத்தம், நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டிலும் நாட்டியம் என்னும் புற நடனத்தை நூல்களில் சொன்ன முறைமை தவறாமல் ஆடினாள் ஆதலின்,

            அவளது கூத்துக்கும் பாட்டுக்கும் அழகுக்கும் ஏற்ற முறையில் அரசன் வழங்க தலைக்கோல் பெயர் பெற்று எல்லா முதன்மையும் பெறுதற்குக் காரணமாகிய முன்னரங்கேறப் பெற்று இக் கணிகைக்குத் தலைவரிசையென நூல்கள் விதித்த முறைப்படி ஆயிரத்தெண் கழஞ்சு பசும்பொன்  ஒரு முறையாகப் பரிசம் பெற்றனள். அதுவே அவளுக்கு நாள் பரிசு. ஆயிரத்தெண்கழஞ்சு பொன் பெறும் இம் மாலையை விலைகொடுத்து வாங்குவோருக்கு மாதவி கிடைப்பாள் என்று மான் போன்ற நோக்கை உடைய ஒரு கூனியின் கையில் கொடுத்து நகரத்துச் செல்வர்கள் உலவும் தெருவில் விலைக்கு விற்பவளைப் போல் நிறுத்த மாதவியின் மாலையைக் கோவலன் வாங்கி கூனியுடனே மாதவியின் மனையை அடைந்து அவளை அணைந்த அன்றே அயர்ந்து மயங்கி நீங்க முடியா விருப்பத்தை அடைந்தன். குற்றமற்ற தன் மனைவியையும் மனையையும் மறந்தனன்.

வெண்பா

            அழகிய புகார் நகரிற் பிறந்த பொன் வளையணிந்த மாதவி எனும் கணிகை, நடிக்கும் அரங்கத்திலே வந்து எல்லாக் கலைகளுக்கும் கருவியாகிய கணிதம் இலக்கியம் என்பவற்றையும் இயற்றமிழின் ஐந்து பாகுபாட்டினையும் இசைத்தமிழின் நாற்பெரும் பண்ணையும் நாடகத் தமிழின் இனிமையுடைய பதினொரு கூத்தினையும் தன் வாக்கினாலும் கூத்தினாலும் ஆடரங்கில் வந்து உலகு அறியும்படி உலவவிட்டாள்.

இந்தக் காதையில் வரும் குறிப்பிடத்தக்க செய்திகள்:

  1. மாதவிக்கு நாளுக்கு ஆயிரத் தெண் கழஞ்சு பொன் என்று உரையாசிரயர் கூறினாலும் பாடலில் அத்தகைய குறிப்பு இல்லை.
  2. கண்ணகிக்குத் திருமணம் 12 அகவையில்; மாதவியின் அரங்கேற்றம் 12 அகவையில். எனவே குழந்தைப் பருவம் 12 அகவை தொடங்கியவுடன்  முடிந்துபோகிறது என்பது நம் முன்னோர் கணிப்பு என்பது தெளிவு. 13 அகவை வரை செய்தவற்றுக்குத் தண்டனை இல்லை என்று ஆணிமாண்டவியர் கதையில் மகாபாரதம் கூறுவதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.
  3. ஆடலும் பாடலும் அழகும் என்பதால் அழகையும் பயிற்சிகளாலும் பிற வழிகளாலும் மிகுத்தனர் என்று தெரிகிறது
  4. காதையின் இறுதியில் உள்ள வெண்பாவில் மாதவி எண், எழுத்து, இயல், பண், கூத்து  ஆகியவற்றை ஆடலரங்கில் வந்து உலவவிட்டாள் என்று கூறுகிறது. இத்தகைய திறன்களை அடைவதைத்தான் எண்ணென் (88=64) கலையினர் கணிகையர் என்ற கூற்று குறிக்கிறது.
  5. இந்த அரங்கேற்றம் முகாமையாதோனர் அரசு நிகழ்ச்சி என்பதை அரசனும் சுற்றத்தாரும் பங்கேற்று விருது வழங்குவது, தலைக்கோல் அரண்மனையில் வைத்து பாதுகாக்கப்படுவது முதலியவற்றிலிருந்து தெரிகிறது.
  6. அரசு நிகழ்ச்சியான இதைத் தொடங்கும் முன் வருணப் பூதரை வழிபட்டனர் எனபதிலிருந்து ஒரு கட்டத்தில் வருணங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை என்ற உண்மை வெளிப்படுகிறது.
  7. அரங்கேற்றத்தின் போது ஆடலுக்குத் துணையாகப் பங்கேற்கும் ஆடலாசிரியன் முதலியோர் தகுதிகளாகத் தரப்பட்டுள்ளவற்றிலிருந்து அவர்கள் அனைவரும் அவரவர் துறைகளில் மட்டுமல்ல அதில் பங்குகொள்ளும் அனைவரது துறைகளையும் பற்றிய தெளிவான அறிவுடையோராக இருக்க வேண்டுமென்பது தெரிகிறது.
இன்றைய திரைப்பட உருவாக்கத்தில் பங்குகொள்ளும் இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடனப் பயிற்சியாளர், திரைக்கதை - உரையாடல் எழுதுவோர் ஆகியோரைவிட  முறையான பயிற்சி பெற்றோராக இவர்கள் இருந்தனர் என்று தெரிகிறது.
7.   அரங்கேற்றுக் காதையில் வரும் செய்திகளும் உரையாசிரியர்கள் அரும்பாடுபட்டுத் திரட்டித் தந்துள்ள செய்திகளும் கலை இலக்கியத் துறைகளுக்குப் பாடநூல்கள் எழுதுவதற்குத் தேவையான அடிப்படைக் கருப்பொருட்களைக் கொண்டுள்ளன. அவற்றைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.
1.ஆடலாசிரியன்
  1. இருவகைக் கூத்து:
1. அகக் கூத்து -  புறக்கூத்து,
2. உள்நாட்டு (தேசி) -  வெளிநாட்டு(மார்க்கம்) கூத்துகள்,
3. வசைக் கூத்து - புகழ்க்கூத்து,
4. வேத்தியல் - பொதுவியல்
5. வரிக்கூத்து - வரிச் சாந்திக் கூத்து,
6. சாந்திக் கூத்து - விநோதக் கூத்து,
7. ஆரியம் - தமிழ்,
8. இயல்புக் கூத்து - தேசிக் கூத்து என்று பலவகை .
இந்த வகைப்பாட்டில் வேங்கடசாமியாருக்கு உடன்பாடில்லை. அவற்றை,
1.அகம் - புறம்,
2.வேத்தியல் - பொதுவியல்,
3.சாந்தி - வினோதம்
என்பவற்றில் ஏதாவது ஒன்றாகத்தான் பிரிக்க வேண்டும் என்கிறார்.
1.வேத்தியல் - வேந்தர்க்கு ஆடுவது,
 2.பொதுவியல் - பிறருக்கு ஆடுவது  
3.சாந்திக் கூத்து :
1 சொக்கம் - சுத்த நிருத்தம்(தாள ஒன்றிப்பை அடிப்படையாகக் கொண்டது)
2. மெய் - மெய்த்தொழில் கூத்து (உடல் வளைத்தாடும் Gymnastics)
                  அவை:
1. தேசி,
2. வடுகு,
3. சிங்களம்.
      3. அவிநயக் கூத்து: கதை தழுவாது பாட்டின் பொருளுக்கேற்ப நடிப்பது
      4. நாடகம்: கதை தழுவி வருவது
      4. விநோதக் கூத்து:
1. குரவை: காமமும் வென்றியும் பொருளாக எழுவர், எண்மர் அல்லது ஒன்பதின்மர் பாடிக்
      கை பிணைந்தாடுவது
2. கலிநடம் -  கழாய்க்கூத்து (கழிநடம்?)
3. குடக் கூத்து - கும்பாட்டம் (கரகாட்டம்), பதினோராடலில் ஒன்று என்று கூறப்பட்டுள்ள
        இது பற்றி கடலாடு காதையில் கருத்துரைக்கப்படும்.
4. கரணம்: படுத்த நிலையில் ஆடுவது. (கர்ணம் அடித்தல் என்கிறோமே அதுவா?)
5. நோக்கு:
1.பாரம்(எடை தூக்குவது போன்றவை?),
2. நுண்மை(நுண்மையான திறங்கள், கத்தி வீசுதல் போன்றவை?),
3. மாயம்: (மாயத்தொழில், மாய - மந்திரங்கள்?).
            முதலானவை.,
6. தோற்பாவை
7. விதூடகக் கூத்து,
            1. வேத்தியல்,
            2. பொதுவியல்,
8. வெறியாட்டு.
9. வென்றிக் கூத்து:
மாற்றா னொடுக்கமும் மன்ன னுயர்ச்சியும் மேற்படக் கூறும் வென்றிக் கூத்தே
10.வசைக்கூத்து:
 பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட வல்ல னாதல் வசையெனப் படுமே (அளவம் காட்டுதல், mimicry?)
2. இருவகைக் கூத்தின் இலக்கணங்கள்:
1. அறுவகை நிலை
      1.வைணவம்,           4.மண்டலம்,
      2.சமநிலை,              5.ஆலீடம்,
      3.வைகாசம்,            6.பிரத்தியாலீடம்(அபிதான சிந்தாமணி - அறுவகை நிலை)       
      2. ஐவகைப் பாதம்:
            1.சமநிலை,              4.காஞ்சிதம்,
            2.உற்கடிதம்,            5.குஞ்சிதம்(அபிதான சிந்தாமணி  - பாதம்)
            3.சஞ்சாரம்,
      3. அங்கக் கிரியை 16:
            1.சரிகை,                              9.உல்லோலம்,
            2.புரிகை,                            10.குர்த்தனம்
            3.சமகலி,                             11.வேட்டனம்,                                          
                   4.திரிகை,                           12.உபவேட்டனம்,
            5.ஊர்த்துவகலிகை,              13.தானபதப்பிராயவிருத்தம்
            6.பிருட்டகம்,                       14.உட்சேபணம்,
            7.அர்த்த பிருட்டகம்,             15.அவட்சேபணம்,
            8.சுவத்திகம்,                        16.நிகுஞ்சனம்(அபிதான சிந்தாமணி - அங்கக்கிரியை)   
4. வருத்தனை நான்கு:
      1.அபவேட்டிதம்,      3.வியாவர்த்திதம்,
      2.உபவேட்டிதம்,      4.பராவர்த்திதம்(தமிழ் மொழியகராதி, தொகையகராதி - வருத்தனை)
      5. நிருந்தக்கை முப்பது:
    1.சதுரச்சிரம்,                         16.கரிக்கை,
    2.உத்துவீதம்,                        17.பக்க வஞ்சிதம்,
                 3.தலமுகம்,                           18.பக்கப்பிரதியோகம்,
4.சுவத்திகம்,                          19.கருடபக்கம்,
5.விப்ரகீர்ணம்,                      20.தண்டபக்கம்,
6.அருத்தரேசிதம்,                    21.ஊர்த்துவமண்டலி,
7.அராகடகாமுகம்,                22.பக்கமண்டலி,
8.சூவித்தவத்திரம்,                   23.உரோமமண்டலி
9.ஆசிமுகம்,                           24.உரப்பார் சுவார்த்த மண்டலி,
10.இரேசிதம்,                        25.முட்டிகசுவத்திகம்,
11.உத்தானவஞ்சிதம்,             26.நளிநீபதுமகோசம்,
12.பல்லவம்,                          27.அலபதுமம்,
13.நிதம்பம்,                           28.உற்பணம்,
14.கசந்தம்,                          29.இலளிதை,
15.இலதை,                             30.வலிதை (அபிதான சிந்தாமணி - நிருத்தக்கை)
                நம் கருத்து: இங்கு கூத்து என்ற தலைப்பில் வருபவை நடிப்பு, நடிப்பு அல்லாத உடலசைவுகள் என்று அனைத்தும் தழுவிய ஒரு முழுமையான தொகுப்பாகும். உடலின் ஒவ்வொரு உறுப்பின் அசைவையும் இந்தத் தொகுப்பில் காண முடிகிறது. தேசி என்றும் தேசிகம் என்றும் குறிப்பிடப்படும் தமிழ்த் தேசியக் கூத்துவகைகளில் பொருள் சார்ந்த  அசைவுகளுக்குக் கூடுதல் இடம் இருக்கிறது. வடுகு, சிங்களம் ஆகியவை உடலசைவுகளையும் நாடகம் சாராதவற்றையும் முதன்மையாகக் கொண்டுள்ளன. இன்று எந் நாட்டில் யார் எந்த வகை உடலசைவுகளைக் காட்டி ஆடினாலும்(இன்று தமிழ்த் திரையுலகினுள் நுழையும் குத்தாட்டங்கள், குலுக்காட்டங்கள் அனைத்தும்) மேலேயுள்ள தொகுப்புக்கு வெளியே செல்ல முடியாது என்பது உறுதி.

                இங்கு பட்டியலிடப்பட்ட பல்வேறு அசைவுகளின் பெயர்கள் தமிழ் சார்ந்தவை என்பது தெளிவு. தமிழர்களுக்கு உரித்தாகிய வெள்ளாளக்கட்டு எனும் பார்ப்பனியத்தின் தாக்கத்தால் பல சொற்களை தமிழ் சமற்கிருதம் ஆகியவற்றின் இரு பிறப்பிகளாய் (Hybrid - பாவாணர்) நம் மக்கள் உருவாக்கியுள்ளனர்.            
             
     3.விலக்கு: இருவகை:
1. பாட்டுகளுக்கு உறுப்பாய் வருவது
      1.வேந்து விலக்கு,    3. ஊர் விலக்கு.
      2.படை விலக்கு,     
2. கதையை விலக்கியும் நடத்தியும் கதைக்கே உறுப்பாவது
             1. பொருள்: நான்கு
1.நாடகம் - அறம் பொருள் இன்பம், வீடு ஆகிய நான்கும் அமைந்தது
2.பிரகரணப் பிரகரணம் - அறம் முதல் 3ம் அமைந்தது
3.பிரகரணம் - அறம் பொருள் அமைந்தது
4.அங்கம் -  அறம் மட்டும் அமைந்தது
2. யோனி: பொருள் தோன்றுமிடம் : நான்கு.
                       1.உண்மையான தலைவனும் உண்மையான நிகழ்ச்சியும்,
                        2.கற்பனையான தலைவனும் உண்மையான நிகழ்ச்சியும்,
                       3.உண்மையான தலைவனும் கற்பனையான நிகழ்ச்சியும்,
                       4.கற்பனையான தலைவனும் கற்பனையான நிகழ்ச்சியும்.
3. விருத்தி: நாடகத்தின் தன்மை:  நான்கு
                        1. சாத்துவதி: அறம் பொருளாக தெய்வமானிடர் தலைவராக,
                       2. ஆரபடி: பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக,
    3. கைசிகி: காமம் பொருளாக காமுகராகிய மக்கள் தலைவராக வருவது (காதல் தை என்னலாமா? இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் சில விதிவிலக்குகள் தவிர்த்து, இவ் வகைப்பாட்டினுள்தாம் வரும். அப்பப்ப, காதலில் இத்தனை வகைகளா!)
    4. பாரதி: கூத்தன் தலைவனாக நடன் நடி பொருளாக காட்டியும் உரைத்தும் வருவது.

4. மெய்ப்பாடு (தமிழில்), சுவை (சமற்கிருதத்தில்) தொல்காப்பியத்தின் படி எண்வகை:
     1.நகை,               5.அச்சம்,
 2.இளிவரல்,         6.பெருமிதம்,
 3.அழுகை,           7.வெகுளி,  
 4.மருட்கை,         8.உவகை.     
சமற்கிருத வழக்கின்படி - ஒன்பது வகை:
1.வீரம்,              6.அவலம்,
2.அச்சம்,            7.வெகுளி,
3. இழிப்பு,          8.நகை,  
4.வியப்பு,           9.சமநிலை.
5.காமம் ,
மெய்ப்பாட்டின் பகுதிகள்:
      1.சுவைப்பொருள்,
      2.பொறியுணர்வு,
      3.குறிப்பு - சுவையுணர்வு மனத்துப்பட்ட வழி உள்ளத்தே நிகழும் குறிப்பு,
      4.விறல் (த்துவம்) - பத்துவகை:
      1.மெய்ம்மயிர் சிலிர்த்தல்,                           6. களித்தல்,
      2.கண்ணீர் வார்தல்,                                  7. விழித்தல்,
      3.நடுக்கமடுத்தல்(நடுக்கம் உண்டாதல்),     8. வெதும்பல்,
      4.வியர்த்தல்,                                             9. சாக்காடு
      5.தேற்றம்,                                               10.குரற்சிதைவு.                                  
      சுவை அவிநயங்கள்(சமற்கிருத முறைப்படி):
      1.வீரச்சுவை அவிநயம்,               6.அவலத்து அவிநயம்,
      2.அச்ச அவிநயம்,                       7.வெகுளிச்சுவை அவிநயம்,
      3.இழிப்பின் அவிநயம்,                8.நகையின் அவிநயம்,
      4.அற்புத அவிநயம்,                    9.நடுவுநிலை அவிநயம்.
      5.காம அவிநயம்,                                     
இவையன்றி பிற அவிநயங்கள் 24: 
1.வெகுண்டோன் அவிநயம்,                          13.செத்தோன் அவிநயம்,
2.ஐயமுற்றோன் அவிநயம்,                14.மழை பெய்யப்பட்டோன் அவிநயம்,
3.சோம்பினோன் அவிநயம்,                           15.பனித்தலைப்பட்டோன் அவிநயம்,
4.களித்தோன் அவிநயம்,                               16.வெயில்தலைப்பட்டோன்(உச்சிப்
                                                                                                பொழுதில் வந்தோன்) அவிநயம்,
5.உவந்தோன் அவிநயம்,                               17.நாணமுற்றோன் அவிநயம்,
6.அழுக்காறுடையோன் அவிநயம்,                 18.வருத்தமுற்றோன் அவிநயம்,
7.இன்பமொடு புணர்ந்தோன் அவிநயம்,         19.கண்ணோவுற்றோன் அவிநயம்,
8.தெய்வமுற்றோன் அவிநயம்,                       20.தலைநோவுற்றோன் அவிநயம்,
9.ஞஞ்ஞையுற்றோன்(ஏமுறு மாக்கள்)             21.அழல்திறம்பட்டோன் அவிநயம்,
    அவிநயம்,
10.சிந்தையுடம்பட்டோன் அவிநயம்                22.சீதமுற்றோன் அவிநயம்,                                                                                             
11.உறங்கினோன் அவிநயம்,                         23.வெப்பமுற்றோன் அவிநயம்,                                                                                                                      
12.துயிலுணுர்ந்தோன் அவிநயம்,                   24.நஞ்சுண்டோன் அவிநயம்.
         
            ஒவ்வொரு அவிநயத்தின் தன்மை குறித்த செய்யுள் நாட்டர் உரையில் தரப்பட்டுள்ளது.

சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற் புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப.
5.சாதி:
      1.வீரம்,             6.பாணம்,
      2.கூச்சம்,           7.சல்லாபம்,
      3.அர்ப்பாயம்,    8.வீழிணி,
      4.பேய்க்காரம்,   9.உத்தாரமடங்கம்,
      5.வியோகம்,      10.பிராசனம்(அபிதான சிந்தாமணி - சாதியாவது)                   
6.சொல்:
      1.உட் சொல் -  நெஞ்சோடு கூறல்
                              2.புறச்சொல் - கேட்போர்க் குரைத்தல்
                   3.தானே எழும்சொல் - ஆகாயச் சொல் (ஆசரீரி).
7.சொல்வகை: 4
1.சுண்ணம் - நான்கடியால் வருவது.         3.வண்ணம் - பதினாறடியால் வருவது.
2.சுரிதம் - எட்டடியால் வருவது.             4.வரிதகம் - முப்பத்திரண்டு அடியால் வருவது
நம் குறிப்பு: இந்த விளக்கம் சரியாகப் படவில்லை.
1. சுண்ணம்: சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுவது,
2.  சுரிதகம்: சொல்லும் சேதியை நேராகக் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசுவது,
3.  வண்ணம்: அழகுபட செய்தியை எடுத்துச் சொல்வது,
4. வரிதகம்: மிகவும் விரித்து வளர்த்துக் கூறுவது.
    நீளத்தைப் பொறுத்தவரை உரையில் கூறிய அடிகள் கணக்கு சரியாக இருக்கலாம்.
8.வண்ணம்:
1.பெருவண்ணம் -      6
2.இடைவண்ணம் -   21
3.வனப்பு வண்ணம். 41
                             மொத்தம். 68
தொல்காப்பியர் இருபது வண்ணம் கூறினார். 100 வண்ணம் கூறுவாரும் உளர்.
9.வரி :
வரிக்கூத்துக்குரிய பாடல்:
அரும்பதவுரையாசிரியர்:
வரிப்பாடலாவது: பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும்
                  எட்டனியல்பு என்பது, இசைக்கிரியைகள் எனப்படும்,
                      1.எடுத்தல்,    5.குடிலம்,
                      2.படுத்தல்,    6.லி,
                      3.நலிதல்,      7.உருட்டு,
                      4.கம்பிதம்,     8.தாக்கு                       
                  ஆகியவை குறித்தது என்று தோன்றுகிறது.
                  அல்லது மெய்ப்பாடுகள் எட்டாகவும் இருக்கலாம்.             
                  ஆறனியல்பு என்பது, என்னவென்று தெரியவில்லை,
அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும், அரும்பதவுரையாசிரியர்.
            வரிப்பாட்டுகள் திணைநிலை வரி, கிணைநிலை வரி, முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி எனவும் அவை பலவாகவும் பாகுபாடெய்தும். கானல் வரியுள்ளும் வேனிற் காதையுள்ளும் விளக்கம் பெறும்.
            வரியெனப் படுவது வகுக்குங் காலைப் பிறந்த நிலனும் சிறந்த தொழிலும் அறியக் கூறி ஆற்றுழி  வழங்கல்.
நம் கருத்து: இவை பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி [(ஒற்றையாள் (ஓரி வரி)] நடிப்பவை.
வரிக்கூத்துகளாவன:
ஒருவகை:
    1.கண்கூடுவரி,           5.கிளர்வரி,
    2.காண்வரி,               6.தேர்ச்சிவரி,
    3.உள்வரி,                 7.காட்சிவரி,
    4.புறவரி,                   8.எடுத்துக்கோள்வரி.(வேனிற்காதை)
           
இன்னொருவகை:[பெரும்பாலும் அளவம், அதாவது, போலச்செய்வது(Mimicry) அல்லது கேலிக்கூத்து(Farce) என்பது நம் கருத்து]
1.சிந்துப் பிழுக்கை,                51.கிழவி,                      
2.சந்தி,                                  52.கிள்ளுப் பிறாண்டி,
3.ஓர்முலை ,                          53.பண்ணி,
4.கொந்தி,                               54.விகடாங்கம்,
5.கவுசி                                  55.அம்மனை,
6.குடப்பிழுக்கை,                   56.பந்து,
7.கந்தன்பாட்டு,                     57.கழங்காடல்,
8.ஆலங்காட்டு ஆண்டி,          58.விண்ணகக் காளி,
9.பருமணல்,                          59.விறற்கொந்தி,
10.நெல்லிச்சி,                        60.வண்டு,
11.சூலம்,                               61.வாரிச்சி,
12.நட்டம்,                             62.பிச்சி,
13.தூண்டில்,                         63.சடாதாரி,
14.ஆண்டி,                            64.பிடார் நிர்த்தம்,
15.அமண்,                             65.தளிப்பாட்டு,
16.புனவேடு,                         66.சதுரங்கம்,
17.ஆளத்தி,                                       67.சோணாண்டு,
18.கோப்பாளி,                       68.மலையாளி, 
19.பாண்டிப் பிழுக்கை,           69.வேதாளி,
20.பாம்பாட்டி,                       70.வாணி,
21.கடவுள்,                            71.குதிரை,
22.சடை,                               72.வில்வேடு,
23.வீரம்,                               73.சிவப்புத்தலை திருவிளக்குப் பிச்சி,
24.மாகேசம்,                          74.திருக்குன்றத்துப் பெண் (மலைச்சி),
25.காமன் சிந்து,                     75.இருள்முகப் பேதை,
26.வாமனரூபம்,                     76.இருளன்,
27.விகடம்,                            77.பல்லாங்குழி,
28.பத்திரம்,                           78.பகடி,
29.கொற்றி,                           79.பகவதியாள்,
30.பலகைவாள்,                     80.தோள்வீச்சு,
31.பப்பரப்பெண்,                   81.சாழல்,
32.தத்த சம்பாரம்                    82.உந்தி,
33.தகுனிச் சங்கம்                   83.அவலிடி,
34. சித்து,                              84.ஊராளி,
35.முண்டிதம்,                        85.யோகினிச்சி,
36.பறை,                               86.பாரன்,
37.பண்டிதன்,                        87.குணலைக் கூத்து,
38.புட்ப பாணம்,                    88.அந்தி விளையாட்டு,
39.பத்தன்,                             89.உள்ளிப்பூ,
40.குரவை,                            90.ஐயனுக்குப் பாடும் பாட்டு,
41.பப்பறை,                          91.ஆடும் படுபள்ளி,
42.காவதன்,                          92.கும்பீடு,
43.பித்தன்,                            93.நாட்டம்,
44.மாணி,                              94.குணாட்டம்,
45.பெரும்பிழுக்கை,               95.குணாலை,
46.கட்களி,                            96.சும்மைப்பூ,
47.ஆண்டு விளையாட்டு,        97.சோனகம்,
48.பறைக்குடும்பு,                   98.மஞ்சரி,
49.கோற்கூத்து,                     99.உழைமை,
50.கிழவன்,                            100.பறைமை.  

            அபிதான சிந்தாமணியும் தமிழ் மொழி அகராதியும் தரும் பட்டியல்கள் இதிலிருந்து சிறு சிறு மாற்றங்களுடன் உள்ளன.

            இந்த வரிக் கூத்துகள் மக்களின் பல்வேறு தொழில்களில் தேர்ச்சி பெற மேற்கொண்ட பயிற்சிகளிலிருந்து மலர்ந்தவை. நடிப்பு சார்ந்த கூத்தின் அடைவுகளுக்கும் முத்திரைகளுக்கும் தோற்றுவாய் இவை என்று கூறலாம். சென்னை நடு பல்தொழிற் பயிலகம் (Central Polytechnic) முதல்வராய் இருந்த பொ-ர்.திரு.மீனாட்சிசுந்தரம் என்பார் இந்த முத்திரைகள், அடைவுகள் அடிப்படையில்தான் தமிழ் எழுத்து வடிவங்கள் தோன்றின என்று கூறுவார்.

            தன்னை ஒரு மார்க்சியன் என்று கூறிக்கொள்ளும், பிறரும் அவ்வாறே நம்பும் சியார்சு தாம்சன் எனும் மாவோயியராகிய கிரேக்க மொழிப் பேராசிரியர் இத்தகைய பயிற்சிகளைப் போலச் செய்யும் மந்திரச் சடங்கு(Imitative magic) என்று  ஏழை நாட்டு மக்களைக் கொச்சைப்படுத்துவார். மானின் உருவத்தை வரைந்து அதன்மீது குறியிட்டு அம்பு எய்து அது குறியில் சரியாகப் பட்டுவிட்டால் வேட்டையின் போது அவ்வாறே நடக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை யாம். உண்மையில் இந்த நடவடிக்கை பயிற்சி தவிர வேறென்ன? விளையாட்டு வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளையும் சியார்சு தாம்சன் வழியில் நாம் போலச் செய்யும் அந்த மந்திரச் சடங்கு என்னலாமே!

            சியார்சு தாம்சனின் இந்தத் திசை திருப்பலைப் பரப்புவனவாக நம் பல்கலைக் கழகங்களும் அவற்றில் பணியாற்றும் அறிஞர்களும் விளங்குகின்றனர்.

                  10. சந்தி: நாட்டியக் கட்டுரையின் பிரிவுகள் - 5.
1.முகம்: எழுவகைப்பட்ட உழவினால் சமைக்கப்பட்ட பூமியுள் இட்ட வித்துப் பருவம் செய்து முளைத்து முடிவது போன்றது. (எழுவகைப்பட்ட உழவு எவையென்று தெரியவில்லை).
2.பிரதிமுகம்: அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலைதோன்றி நாற்றாய் முடிவது போல்வது.
3.கருப்பம்: அந்நாற்று முதலாய்க் கருவிலிருந்து பெருகித் தன்னுள் பொருள் பொதிந்து கருப்ப- முற்றி நிற்பது  போல்வது.
4 விளைவு: கருப்பம் முதலாய் விரிந்து கதிர் திரண்டுக் காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது.
5 துய்த்தல்: விளைந்த பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது.
   ஆங்கிலத்தில் Act என்பதற்கு இது இணையானதா?
11.  சேதம்: ஆதி(மூல)க் கதையை ஆரியம், தமிழ் எனும் இருவகைக் கூத்திற்கேற்பச் சேதித்திடுவது (கூறுகளாக்கிப் பிரித்துச் சேர்த்தல்) என்பர்.
              திரைக்கதை அல்லது Script என்பதா இதை?

மெய்ப்பாடு என்ற தலைப்பின் கீழ் வந்துள்ள குறிப்பு, சத்துவம், அவிநயம் ஆகிய மூன்றையும் தனி வகைத்திணைகளாகக் காட்டி விலக்கு உறுப்புகளை மொத்தம் 14 எனக் காட்டும், வேங்கடசாமியார் தந்துள்ள பாடல்:

விலக்குறுப் பென்பது விரிக்குங் காலைப்
            பொருளும் யோனியும் விருத்தியுஞ் சந்தியும்
                        சுவையுஞ் சாதியுங் குறிப்புஞ் சத்துவமும்
                அவிநயஞ் சொல்லே சொல்வகை வண்ணமும்
                        வரியுஞ் சேதமும் உளப்பபடத் தொகைஇ
                        இசைய வெண்ணி னீரே ழுறுப்பே

விலக்கு 2 என்ற தலைப்பின் கீழ் பொருள் முதல் சேதம் ஈறாகத் தரப்பட்டுள்ள 11 தலைப்புகளிலும் வருபவை பலவகைக் கூத்தும், விலக்கினிற் புணர்த்து (வரி 13) என்பதில் விலக்கு என்ற சொல்லின் விளக்கமாகும். இது போன்ற செறிவு மிக்க பகுதிகளை இளங்கோவடிகள் ஆங்காங்கே விதைத்துள்ளார்.

4.   பதினோராடல்:
   1. நின்றாடல்,    
1.அல்லியம்,            4.குடம் (கும்பம்),
2.கொடுகொட்டி,      5.பாண்டரங்கம்,
3.குடையாட்டம்,      6.மல்.
         2. படிந்தாடல் - 5
1. துடி         4.மரக்கால்
2. கடையம் 5.பாவை.
3. பேடு
5. பாட்டு:
    அக நாடகங்களுக்கு உரிய உருக்கள்: கந்த முதல் பிரபந்த உரு  ஈறாக 28. கந்தம் என்பது அடிவரையறை உடைத்தாய் ஒரு தாளத்தால் புணர்ப்பது; பிரபந்த மென்பது                            அடிவரையறையின்றிப் பல தாளத்தால் புணர்ப்பது(ராகமாலிகை?). புற நாடகங்களுக்குரிய உருக்கள்: தேவபாணி (கடவுள் வாழ்த்து) முதலாக அரங்கொழி செய்யுள் (வாழிபாடுதல் அல்லது மங்கலம் பாடுதல்) ஈறாகச் செந்துறை விகற்பங்கள் எல்லாம்.
6.   கொட்டு: 3.
1. கீதாங்கம்: கீதத்துக்கு வாசிப்பது.
2. நிருத்தாங்கம்: நாட்டியத்துக்கு வாசிப்பது.
3. உபயாங்கம்: இரண்டுக்கும்  வாசிப்பது  
7.   ஆடல்: அகக் கூத்திலும் புறக் கூத்திலுமுள்ள ஆடல்.
கீற்று, கடிசரி முதலாகிய தேசிக்குரிய கால்கள் 24ம் சுற்றுதல், எறிதல், முதலாகிய வடுகுக்குரிய கால்கள் 14ம் உடற்றூக்கு முதலான உடலவர்த்தனை ஒன்பதும் அகக் கூத்துக்குரியன. சிங்களம் இருவகை நிலையினும் எய்தும் என்பாருமுனர். உடலவர்த்தனையைச் சிங்களம் என்பாருமுளர். எனவே ஆடல்,
1.தமிழ்(தேசி):
1.  கீற்று,                         13.ஊர்தல்,
2.  கடிசரி,                       14.கடுக்கல்,
3.  மண்டலம்,                  15.வாங்குதல்,
4.  வர்த்தனை,                 16.அப்புதல்,
5.  கரணம்,                      17.அணுக்குதல்,
6.  ஆலீடம்,                     18.வாசிப்பு,
7.  குஞ்சிப்பு,                   19.குத்துதல்,
8.  கட்டுப்புரியம்,             20.நெளிதல்,
9.  களியம்,                      21.மாறுகால்,
10.உள்ளாளம்,                 22.இட்டுப்புகுதல்,
11.கட்டுதல்,                    23.சுற்றிவாங்குதல்,
12.கம்பித்தல்,                  24.உடற்பிரிவு(அபிதான சிந்தாமணி,தேசிக்குரிய கால்கள்)
2.வடுகு:
1.சுற்றல்,                         8.  நீக்கல்,
2.எறிதல்,                        9. முறுக்கல்,
3.உடைத்தல்,                  10.அலுக்கல்,
4.ஒட்டுதல்,                      11.வீசல்,
5.கட்டுதல்,                      12.குடுப்புக்கால்,
6.வெட்டுதல்,                   13.கத்திரிகைக்கால்,
7.போக்கல்,                     14.கூட்டுதல்(அபிதான சிந்தாமணி, வடுகிற்குரிய கால்கள்)
3.சிங்களம்(உடலவர்த்தனை):
1.மெய்சாய்த்தல்,        6.அசைதல்,
2.இடைநெரித்தல்,     7.பற்றல்,
3.சுழித்தல்,                          8.விரித்தல்,
4.அணைத்தல்,                    9.குவித்தல்(அபிதான சிந்தாமணி, உடலவர்த்தனை)
5.தூக்குதல்,
என ஆடல் மூவகைப்படும்.
8.   பாடல்:
1.இன்பம்,         5.வன்சொல்,
2.தெளிவு,          6.இறுதி,
3.நிறை,            7.மந்தம்,
4.ஒளி,               8.உச்சம்
எனும் எண்வகைப் பயனுமுடைய பாடல்
9.   பாணி : அதாவது தாளம் - 4 நிலைகள் உடையது.
கொட்டு - அமுக்குதல்→   மாத்திரை, வடிவு .
அசை: தாக்கி எழுதல் → 1 மாத்திரை, வடிவு .
தூக்கு:  தாக்கித் தூக்குதல்→  இரண்டு மாத்திரை, வடிவு .
அளவு →  தாக்கின ஓசை நேரே மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல், வடிவு .
அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதலாக பதினாறு மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாக நாற்பத்தொரு தாளம் புறக்கூத்துக்குரிய எனவும் ஆறன் மட்டம் என்பனவும் எட்டன் மட்டம் என்பனவும் தாளவொரியல் என்பனவும் தனிநிலை ஒரியல் என்பனவும் ஒன்றன் பாணி முதலாக எண் கூத்துப் பாணி ஈறாகக் கிடந்த பதினொரு பாணி விகற்பங்களும் முதல் நடை வாரம் முதலாயினவும் அகக்கூத்துக்கு உரியன என்றும் கூறுவர்.

10.  தூக்கு: இத் தாளங்கள் வழி வரும் எழுவகைப்பட்ட தூக்குகள்: அவை,
1.செந்தூக்கு         - 1சீர்,
2.மதலைத் தூக்கு - 2 சீர்,
3.துணிபுத் தூக்கு  - 3 சீர்,
4.கோயில் தூக்கு  - 4 சீர்,
5.நிவப்புத் தூக்கு  - 5 சீர்,
6.கழாற்றுக்கு       - 6 சீர்,
7.நெடுந்தூக்கு      - 7 சீர்.
11. பிண்டி: ஒன்று, ஒற்றைக்கை = இணையா வினைக்கை
தொழிற்கை = பொருட்கை - 33
1.  பதாகை,                   18. தாம்மிர சூடம்,
2.  திரிபதாகை,              19.பசாசம்,  
3.  கத்திரிகை                      .அகநிலைப் பசாம்
3.  கத்தரிகை,                     . முகநிலைப் பசாம்
4.   தூபம்,                            . உகிர்நிலைப் பசாம்
5.  அராளம்,                     20.முகுளம்,
6.  இளம்பிறை,                21.பிண்டி,
7.  சுகதுண்டம்,                22.தெரிநிலை,
8.  முட்டி,                         23.மெய்ந்நிலை,
9.  கடகம்,                      24.உன்னம்,
10.சூசி,                          25.மண்டலம்,
11.பதுமகோசிகம்,           26.சதுரம்,
12.காங்கூலம்,               27.மான்றலை,
13.கபித்தம்,                   28.சங்கம்
14.விற்பிடி,                     29.வண்டு,
15.குடங்கை,                  30.இலதை,
16.அலாபத்திரம்,             31.கபோதம்,
17.பிரமரம்                     32.மகரமுகம்,
                                     33. வலம்புரி.
12.  பிணையல்: இணைக்கை = இரட்டைக்கை
தொழிற்கை: 15
1.அஞ்சலி,                     9.  தோரம்,
2.புட்பாஞ்சலி,               10.உற்சங்கம்,
3.பதுமாஞ்சலி,               11.புட்பபுடம்,
4.கபோதம்,                   12.மகரம்,
5.கற்கடகம்,                   13.சயந்தம்,
6.கவத்திகம்,                  14.பயவத்தம்,
7.கடகாவருத்தம்,           15.வருத்தமானம்,
8.நிடதம்,
13.  எழிற்கை: அழகு பெறக்காட்டுங்கை × தொழிற்கை.
14.  கூடை: ஒற்றைக் கை - இரட்டை ஒற்றைக் கையையும்(குவித்த கைகள்) குறிக்கும்.
வாரம்: இரட்டைக்கை, பிணையல்

2.இசையாசிரியன்:

1.குழல் - வங்கியம். செய் பொருள்:  மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி.
   மூங்கில் உத்தமம், வெண்கலம்  மத்திமம், மற்றவை கீழ்.

            காற்று மயங்கா நிலத்தில் இளமையும் நெடும்பிராயமும் இன்றி ஒரு புருடாயு(மனித வாழ்நாள் 100 ஆண்டுகளா?)ப் புக்க பெரிய மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாகச் செய்து நிழலில் ஆற வைத்து திருகுதல், பிளத்தல், போழ்தல் இன்மையறிந்து ஓர் ஆண்டு சென்ற பின் வங்கியம் செய்யப்படும். நீளம் இருபது விரல். சுற்று நாலரை விரல். துளையிடும் போது நெல்லரிசியில் பாதி மரம் விட்டுக் கடைந்து வெண்கலத்தால் பூண் கட்டி இடமுகத்தை அடைத்து வலமும் வெளியாக விடப்படும். இதிலே தூபமுகத்தின் இரண்டு விரல் நீக்கி முதல் வாய் விட்டு இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலிலும் எட்டுத் துளையிடப்படும். துளைகளின் இடைப் பரப்பு ஒரு விரல் அகலம் கொள்ளப்படும்.

            மூலாதாரம் தொடங்கி எழுத்தின் நாதம் ஆளத்தியாய்(ஆலாபனையாய்) நெஞ்சும் தொண்டையும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் என்னும் பெருந்தானம் எட்டிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் கிரியைகள் எட்டாலும் பண்ணிப்படுத்தலால் பண் எனப்பட்டது என்றும் கூறுவர். மகர ஒற்றுடன் (ம்=ஃ?) ம, ந, த என்ற மூன்று ஒற்றுக்களுடன் கூடி அ, இ, உ, எ, ஒ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, எனும் குற்றெழுத்துகள், நெட்டெழுத்துகள் பத்திலும் செய்யப்படும் எனவும் அச்சு, பரணை என்றும் காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி என்றும் எழுத்து வேற்றுமையால் பெயரெய்தும் என்றும் கூறுவர்.
            நம் குறிப்பு: இசை பிறக்கும் முதன்மை இடங்கள்(பெருந்தானங்கள்) எட்டாக இருப்பது இசை நரம்புகள், அதாவது சுரங்கள் எட்டு என்று நாம் கீழே கூற இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. கிரியைகள் எட்டு என்பது அக்கருத்துக்கு அரண் செய்கின்றன.

2. தண்ணுமை: கொட்டு வகைகளுக்குப் பொதுச்சொல், கொட்டு வகைகளில் ஒன்று.
3. உரிப்பொருள் - இயக்கம், பாட்டின் நடை4.
1. முதனடை - மிகத் தாழ்ந்த செலவினையுடையது
2. வாரம் - சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடையது
3. கூடை - இசைச்  செறிவும் சொற்செறிவும் உடையது.
4. திரள் - மிக முடுகிய நடையினை உடையது.


3.புலவன்:

          மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும் என்ற வரிகள் இயல், இசை, நாடகத் துறைகளில் இடம்பெறும் பாடல்கள் குறித்த திறனாய்வு எவ்வளவு வலுவான நிலையில் இருந்தது என்பதை அறிய வியப்பாக இருக்கிறது. பிற கிளைகளிலும் இவ் வளர்ச்சி நிலை இருந்திருக்கும் என்பது உறுதி.

            இப்போது நம் கேள்வி, நம் பண்டைய இந்த வளர்ச்சி இடைக்காலத்தில் முற்றிலுமாக இல்லாது ஒழிந்தது எவ்வாறு? நமக்குக் கிடைக்கும் ஒரே விடை, இளங்கோவடிகள் காலத்தில் வலிமையாகத் தமிழகத்தில் காலூன்றிவிட்ட அம்மணத்தின் அழிப்பு வேலையால்தான் என்பது. தமிழர்களின் பண்பாடென்று இன்று எஞ்சி இருப்பவை எல்லாம் அன்று அவர்கள் விதைத்தவையும் விட்டுவைத்தவையும்தாம். அதைத்தான் நம் பல்கலைக் கழக மைனாக்கள் வாய் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

            நம் பண்டை இலக்கியங்கள் வாயிலாக அறியும் அம்மண ஊடுருவலுக்கு முந்திய அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், கோயில்கள் போன்ற பருப்பொருள் சான்றுகள் கிடைக்காமல் போனதற்குச் அம்மணர்களின் இந்த அழிம்பு வேலையே காரணம். புத்தர்களின் ‘பங்களிப்பும்’ அதில் கணிசமாக உண்டு.  அது போல் அம்மண - புத்தர்களின் பருப்பொருள் சான்றுகள் அருகியும் சிதைந்தும் காணப்படுவதற்கு சமணர்களை அகற்றி அரியணை ஏறியவர்கள் பழிக்குப் பழி என்று செயல்பட்டதுதான் காரணம்.        

            அம்மணர்களின் இந்த அழிம்பு மனப்பான்மையின் வெளிப்பாடுகள் தன் காலத்திலேயே தொடங்கிவிட்டதால்தான் இளங்கோவடிகள் தமிழகத்தின் தன் கால பண்பாடுகள் குறித்த பதிவுகளை மேற்கொள்வதற்காக கண்ணகி கதையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது.

4.தண்ணுமை ஆசிரியன்:

1. இசை: பதினோராயித்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய (11,991) ஆதியிசைகள்      என்பர்.
1. தண்ணுமை:
1.  பேரிகை,                          17.சந்திர வளையம்,
2.  படகம்,                             18.மொந்தை,
3.  இடக்கை(பறை?),             19.முரசு,
4.  உடுக்கை,                         20.கண்விடு தூம்பு,
5.  மத்தளம்,                           21.நிசாளம்,      
6.  சல்லிகை,                                     22.துடுமை
7.  கரடிகை,                          23.சிறுபறை,
8.  திமிலை,                           24.அடக்கம்,
9.  குடமுழா,                          25.தகுணிச்சம்,
10.தக்கை,                             26.விரலேறு,
11.கணப்பறை,                      27.பாகம்,
12.தமருகம்,                           28.உபாங்கம்,
13.தண்ணுமை,                      29.நாழிகைப்பறை,
14.தடாரி,                              30.துடி,
15.அந்தரி,                             31.பெரும்பறை
16.முழவு,
2.முழவு
1.அகமுழவு: மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா முதலியன - உத்தம வகை.
2. அகப்புற முழவு: தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலியன - மத்திமம்.
3. புறமுழவு: கணப்பறை முதலிய - அதமம்.
4. புறப்புற முழவு: நெய்தற்பறை (மேலே கூறப்படவில்லை)  முதலியன. 
5. வீர முழவு: முரசு, நிசாளம், துடுமை, துமிலை என்பவை நான்கும் பண்ணமை முழவு.
6. நாழிகைப்பறை:   நாண்முழவு.
7. துடி: காலை முழவு.

5.குழலாசிரியன்:

1.சித்திரப் புணர்ப்பு: இசை கொள்ளும் எழுத்துகளின் மேல் வல்லொற்று வந்த இடத்தில் மெல்லொற்றுப் போல் பண் தன்மையை நிறுத்தல்
2.வஞ்சனைப் புணர்ப்பு: இசை கொள்ளா எழுத்துகளின் மேல் வல்லொற்று வருமிடங்களில் மெல்லொற்றுப் போல நெகிழ்த்துச் சேர்த்தல்.
3.வர்த்தனை:  நான்கு, அவை:
1. ஆரோகணத்தை ஏற்றல்,
2. ஆரோகணத்தை இறக்கல்,
3. அவரோகத்தை ஏற்றல்,
4.அவரோகத்தை இறக்கல்.
4.பட்டடை:
அடிமணை - எல்லா இசைகளுக்கும் அடிமணையாகிய இளி.

5.இயக்கம்: நான்கு - அவை:
1. முதனடை  - மிகத் தாழ்ந்த செலவினை உடையது
2. வாரம்        - சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடையது
3. கூடை       - சொற்செறிவும் இசைச்செறிவும் உடையது
4. திரள்         - மிக முடுகிய நடையை உடையது

6.யாழாசிரியன்:
         1.அலகு     
குரல்,

துத்தம்
கைக்கிளை
உழை,
இளி
விளரி

தாரம்
4
4
3
2
4
3
2
மத்திமம்
நெடில் மட்டும்
(ஔ?)
பஞ்சமம்
தைவதம்
நிடாதம்
சட்டம்
நெடில் மட்டும்
(ஐ?)
ரிசபம்
காந்தாரம்
         இவற்றுடன் ஆ,ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள ஆகியவற்றை எவ்வாறு பொருத்துவது?

   பஞ்சமம், சட்டம்  இரண்டும் நெடில் மட்டும். பிற குறில், நெடில் ஆகிய இரண்டும் கொண்டவை. இதை வைத்து இவற்றை இணைக்க முடியும்.

   ச ரி க ம ப த நி ச என்று எட்டு இசைகள் உண்டு ஃஆய்தத்தைச் சேர்த்தால் எட்டு வரும். இதையும் ஆய்ந்து பார்க்க வேண்டும்.

         2. தாரம் → உழை → குரல் → இளி → துத்தம் → விளரி → கைக்கிளை
க(காந்தாரம்) → நி (நிடாதம்) → ம(மத்திமம்) → ச(சட்டம்) →  ப(பஞ்சம்) → ரி(ரிடபம்) → (தைவதம்).
            இதன் பொருள் ஒவ்வொரு நரம்பிலிருந்தும் அதன் ஐந்தாவது நரம்பு தோன்றும் என்பது.
         3. இராகங்கள் பண் எனவும்  திறம் எனவும் இருவகைப்படும்.
           1. பண்: நிறை நரம்பால் ஆனது - ஏழு நரம்பு - சம்பூரணம் (சமற்கிருதம்).
           2. திறம்: குறை நரம்பால் ஆனது - அவை 3 வகைப்படும்.
              1. பண்ணியல் திறம் - சாடவம் (சமற்கிருதம்),
              2. திறம் - ஒளடவம்(சமற்கிருதம்),
              3. திறத்திறம் - சதுர்த்தம்(சமற்கிருதம்).
4. நெய்தல் யாழுக்கு(பண்ணுக்கு) விளரி என்றும் பெயர். இது திறனில் யாழ் எனப்படுதலால் திறனுடைய பிற நான்குமே பெரும்பண்கள் எனப்படும்.
5. ஐந்திணைக்கும் உரிய யாழ்கள் (பண்கள்):
1. குறிஞ்சியாழ் (யாம யாழ்),         4. நெய்தல் யாழ்,
2. பாலையாழ்,                           5. மருத யாழ்.
3. முல்லையாழ், 

            முல்லை யாழ், நெய்தல் யாழ் இரண்டையும் செவ்வழி யாழ் என்று அகராதிகள் குறிப்பிடுகின்றன. வேங்கடசாமியாரும் அவ்வாறே கூறி கருத்து எதுவும் கூறாமல் விட்டுவிட்டார். நெய்தல் பண்ணில் விரிவகைகள்(Varieties) இல்லாமையால், செய்யுளில் எந்தத் தொடையிலும் சேராததைச் செந்தொடை என்பது போல் இதனையும் செவ்வழி யாழ் என்றனர் போலும். முல்லைப் பண்ணில் விரிவகைகள் மிகுதி என்பதால் ஒரு சாரர் அதனைச் செவ்வழி யாழ் என்று வழக்காடினரோ?     

தாரம் குரலாக உழை அதற்குக் கிளையாகத்  தோன்றுவது  பாலையாழ்,
உழை குரலாக குரல் அதற்குக் கிளையாகத் தோன்றுவது குறிஞ்சியாழ்,
குரல் குரலாக அதற்கு இளி கிளையாகத் தோன்றுவது மருதயாழ்,
இளி குரலாக அதற்கு துத்தம் கிளையாகத் தோன்றுவது செவ்வழியாழ் (இந்தச் செவ்வழி யாழ் முல்லை யாழா?)
கிளை என்பது நின்ற நரம்பிலிருந்து தோன்றும் நரம்பு, அது நின்ற நரம்புக்கு ஐந்தாவது நரம்பு. நின்ற   நரம்புக்கு நான்காவது நரம்பு நட்பு நரம்பு
மூன்றாவதும் ஆறாவதும்  பகை நரம்பு
இரண்டாவதும் ஏழாவதும் இணை நரம்பு
பாலையாழ் - 7 பண்கள்
1. செம்பாலை,                     5. கோடிப்பாலை,
2. படுமலைப் பாலை,           6. விளரிப்பாலை,
3. செவ்வழிப்பாலை,            7. மேற்செம்பாலை.
4. அரும்பாலை,
பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்ற நான்கு பெரும் பண்கள் என்று உரையில் கூறியிருப்பதில் செவ்வழி என்பதை நாம் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக முல்லை என்றே கூறுவோம். அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என இன வேறுபாட்டால் பெரும்பண்கள் : 4×4=16 ஆகும்.
                                                   அகநிலை     புறநிலை   அருகியல்    பெருகியல்    மொத்தம்    
            1.பாலை        "                   "                 "                     "          4
            2.குறிஞ்சி       "                 "                "                   "               4                               
            3.மருதம்         "                 "                "                   "               4
            4.முல்லை       "                 "                "                   "               4
                                                                                                              ------- 
                                                             ஆக மொத்தம்                             16
நான்கு பெரும் பண்களுள்
1.பாலை யாழுக்கு                                    5                                
2.குறிஞ்சி                                              8
3.மருத                                                  4
4.முல்லை                                             4
                                                             ------- 
                                             மொத்தம்                        21 திறங்கள் உள்ளன. இவை,
  21ம் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் எனும் வேறுபாட்டால் 21×4 = 84 ஆகும்.
                                                                                                                 பண்கள் =  16
                                               தாரப் பண்திறம், காஞ்சி, படுமலை ஆகியவை             3
                                                                                                                                 -------     
                                                                மொத்தம்                                                    103
மேலே பெயர் குறிப்பிடப்படாத 96க்கும் பெயர்கள் பிங்கல நிகண்டில் உள்ளன.

கேள்வி நரம்பு, சுரம் குரல் முதலாகிய ஏழு நரம்பினையும் இரட்டித்த பதினால்க் கோவை என்க
           
தாரத்துக்குக் கைக்கிளை இடமுறையால் ஐந்தாவது ஆகையால் கிளை நரம்பென்றார். செம்முறைக் கேள்வியாகும் பதினால்க் கோவையாவது,
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்;
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.

 இதிலிருந்து உண்டாகிய கேள்விக் கிடக்கையாகும் பதினால்க் கோவை வருமாறு:
உழை, இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை
உழை, இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை இவற்றை முறையே

ம ப த நி ச ரி க - ம ப த நி ச ரி க எனவும் நி ச ரி க ம ப த - நி ச ரி க ம ப த எனவும் கூறிக்கொள்க. இறுதியாய் நின்ற கைக்கிளை முதலாக இணை நரம்பு முதலும் இறுதியுமான நரம்பு; உழை முதல் கைக்கிளை இறுதியும் கைக்கிளை முதல் துத்தம் இறுதியும் அவ்வாறே ஏனையவும் முதலும் இறுதியும் ஆகி என்க. உழை, கைக்கிளை, துத்தம், குரல், தாரம், விளரி, இளி என இட முறையால் ஒவ்வொன்றும் குரலாகச் செம்பாலை முதலாயின தோன்றியமை அறியத்தக்கது.

மெலிதல் - இறங்குதல், அவரோகணம்
வலிவு - மேல்; உச்சம்; தாரம். மெலிவு - கீழ், மந்தம், சமம் - மத்திமம்.  இவை ஓசையின் மூவகை இயக்கம்
மேலே கூறியவற்றைப் புரிந்துகொள்ள முயல்வோம்.                                                                  
                        குரல்      துத்தம்   கைக்கிளை   உழை   இளி   விளரி    தாரம்
அலகுகள்:              4           4                3               2          4         3           2
            தாரம் 2 - 1 = 1 அலகு + குரல் 4 - 2 = 2 அலகு = 3 அலகு கைக்கிளை,  
            தாரம் 2 - 1 = 1 அலகு + விளரி 3 அலகு           = 4 அலகு துத்தம்,
            குரல் 4 -  2 = 2 அலகு + உழை 2 அலகு           = 4 அலகு இளி,
            இளி 4 அலகு                                                   = 4 அலகு குரல்,
            கைக்கிளை 3 - 1                                              = 2 அலகு உழை,
            துத்தம் 4 - 1                                                     = 3 அலகு விளரி,
            கைக்கிளை 3 - 2 = 1 + (துத்தம் 4 3 =) 1        = 2 அலகு தாரம்.
                          
இந்த விளக்கம் சரியாக வரவில்லை. கிளை நரம்பு என்பது நேர் வரிசையில், அதாவது குரல் தொடங்கி தாரம் நோக்கிய திசையில்தான் இருக்க வேண்டுமே அன்றி எதிர்த் திசையில் இருக்க முடியுமா என்பது எமது ஐயம். எட்டாவதாக ஒரு பண் இருந்தால் கடிகாரச் சுற்றில் இது சரியாக வரக்கூடும்.

′இளி′ என்பதை ஏடு எடுத்து எழுதியோர் கிளை என்று எழுதியிருக்கலாம் என்றும்  ஏட்டுப்படிகளிலேயே பல பாட வேறுபாடுகள் இருப்பதையும் வேங்கடசாமியார் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாமும் காலம் இடம் கொடுத்தால் இசை பற்றிய எம் புரிதல்களை மேம்படுத்திக்கொண்டு முயன்றுபார்க்க எண்ணியுள்ளோம்.
 
அரங்கு: 

அரங்கின் அமைப்பு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள கோல் அளவை இன்று தச்சர்கள் கையாளும் அடி(33 விரலங்கள்) கொண்ட தச்சு முழக்கோல் எனப்படும் கோலாகக் கொண்டால் மிகப் பொருத்தமாக இருப்பது தெரியவருகிறது. இந்த கோல் நம் நாட்டில் இன்றைய மீற்றரிலான நீட்டலளவைக்கு முன்பு நடைமுறையிலிருந்த ஒரு அளவைத் தொடரி (சங்கிலி)யின் நீளமான 66 அடிக்கு 24 இல் ஒரு பங்கு அதாவது  ஆகும். நம் நாட்டு மாட்டுவண்டிச் சக்கரம் (பைதா)வின் சுற்றளவில் 6இல் 1 பங்கு ஆகும். 

வருணப் பூதர் நால்வரது உருவங்களை எழுதி தொழுவதற்கு வசதியாக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதை, வருணங்கள் நான்கும் சமமாக மதிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சமாகக் கொள்ள வேண்டும். மக்களை அவர்களது குமுகப் பங்களிப்பின்  அடிப்படையில் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்து முடிவுகள் எடுப்பதில் சரிசமமான உரிமையுடன் பேராளர்கள் பங்கேற்க உருவாக்கப்பட்டதன் எச்சமாக, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இப்பூத உருவங்கள் வரையப்பட்டு வணங்கப்பட்டுள்ளது பின்னரும் காட்டப்படும். அழற்படு காதையில் இப்பூதங்களின் வடிவங்கள் நகரின் பகுதிகளிலேயே நிறுவப்பட்டுள்ளது கூறப்படுகிறது.

அரங்கின் விளக்கமைப்பு பற்றிய விளக்கம் வியக்கவைக்கிறது. நம் நாட்டில் இன்றுவரை எய்தப்படாத ஒரு அருஞ்செயலாகும் இது. இது பற்றிய சிந்தனை கூட இன்று இத்துறை தொடர்பானவர்கள் இடையில் இல்லை. இத்தகைய ஒரு திறனை அக் காலத்தில் எய்தி இருந்தார்களா என்பதை விட நூலில் காட்டியுள்ளது போன்று, தூண்களின் நிழல் மேடையிலோ பார்வையாளர்கள் மீதோ விழாதவாறு விளக்குகளை அமைக்க வேண்டும், அமைக்க முடியும் என்ற எண்ணமே பெரும் வியப்புக்கு உரியதாகும். இன்று நாடெங்கிலுமுள்ள அரங்குகளில் விளக்கு அமைப்புகள் மட்டுமல்ல, ஒலி அமைப்புகள் பற்றியும் ஒரு தெளிந்த சிந்தனை நமக்கு இல்லை. ஒலிப் பொறியியலில் தேர்ந்தவர்களை அல்லது பயிற்சி உள்ளவர்களை ஒலி - ஒளி அமைப்பு நிறுவனங்கள் பணியில் அமர்த்த வேண்டும் என்ற சிந்தனை எவர்க்கும் இல்லை. வேறு வேலைகளுக்குத் தகுதியற்றவர்களுக்கு என்று குமுகத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அரங்குகளான பள்ளிகளில் ஆசிரியப் பணி ஒதுக்கப்பட்டிருப்பது போலத்தான் அரங்குகளில் ஒலி - ஒளி அமைக்கும் ஊழியர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். சிலப்பதிகாரம் காட்டுவது போன்ற பண்டைத் தமிழர்களின் மனப்போக்கை நாம் என்று பெறப் போகிறோம்?

அரங்கேற்றம்:

இயல்பின் வழாஅ இருக்கை முறைமையின் என்பதில் இருக்கை முறைமை என்ற சொல் ஆங்கிலத்தில் Protocol என்பதற்கு இணையானதாகும். நிகழ்ச்சியில் பங்கேற்போர் அரங்கில் அவரவர்க்குரிய இடத்தில் பொருந்துவதை நெறிப்படி நிற்ப என்று குறிப்பிடுகிறார்.

அதுவே என்ற சொல்லுக்கு (வரி 163) வேங்கடசாமியார் அன்று தொடங்கி அதுவே நாள்தோறும் பரிசமாக என்று பொருள் கொள்கிறார். இது சரிதானா என்ற ஐயம் கனாத்திறமுரைத்த காதையில் உள்ள சில வரிகளால் ஏற்படுகிறது. அதனை அவ்விடம் வரும்போது நாம் பார்க்கலாம்.

மாலையைப் பெற்றுத் தெருவினில் நின்று நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த வீறுயர் பசும்பொன் பெறுவதும் மாலை, மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கெனக் கூவும் பான்மையில் நின்றவள், பொதுவாகக் கருதுவது போல் மாதவியின் தோழியோ அவள் தாயின் தோழியோ, அதாவது மாதவியின் செவிலித்தாயோ என்பதற்கு எந்தத் தடயமும் இல்லை; அவள் ஒரு கூனி என்பதிலிருந்து அவள் வேறொரு பணிப்பெண் என்பது புலனாகிறது.

இந்தக் காதையில் நாட்டியத்தோடு இணந்த அனைத்துத் துறைகளையும் பற்றி மிக விரிவான செய்திகள் தரப்பட்டிருந்தாலும் கதை கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியைப் பிரிந்து நாடகக் கணிகையான மாதவியைச் சேர்ந்ததையே கூறுகிறது.

0 மறுமொழிகள்: