15.11.16

பருவமழையும் மண்குதிர்க் காடுகளும்

பருவமழையும் மண்குதிர்க் காடுகளும்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாகப் பருவ மழை பொய்த்துவருகிறது. குறிப்பாக உள் மாவட்டங்கள் மிகுந்த வரட்சியைச் சந்தித்து வருகின்றன. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இதோ இன்று வரும் நாளை வரும் என்று வானிலையியல் துறை தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறது. இதன் உண்மையான காரணம் என்ன? ஒரு கோணத்தில் ஆய்ந்து பார்ப்போம்.

கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் நிலத்தோடு தோடர்பு கொள்வது ஆறுகள் கடலில் கலக்கும் கயவாய் எனப்படும் கழிமுகங்கள் வழியாகவே. நிலத்தில் காற்றின் மிகக் கூடிய அழுத்தம் உள்ள இடம் கடல் மட்டத்தில் இருக்கும் கயவாய்களே. எனவே இங்கிருந்து அழுத்தம் கூடிய காற்று கடலில் நிலைகொண்டு சுழன்றபடி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நோக்கிச் செல்கிறது, அதை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இதனால் நிலத்தில் காற்று வெற்றிடம் உருவாகிறது. அதை நிரப்ப மேலடுக்கிலிருந்து காற்று கீழிறங்குகிறது. அவ்வாறு காற்று இறங்கியதால் மேல் மட்டத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப கடலின் மேல் உயரத்தில் இருக்கும் நீர் சுமந்த மேகம் உள்ளிறங்கி மலையில் மோதி மழையை அனைத்துப் பகுதியிலும் பொழிவிக்கிறது. இந்த நிகழ்முறை தடங்கலின்றியும் சிறப்பாகவும் நடைபெற ஆற்றுக் கழிமுகங்கள் தடங்கலின்றி தெளிவாகத் திறந்திருக்க வேண்டும். அவ்வாறு தமிழகக் கடற்கரையிலிருக்கும் ஆற்றுக் கழிமுகங்கள் தடங்கலின்றித் தெளிவாக இருக்கின்றனவா என்பது இன்றைய கேள்வி.

2004ஆம் ஆண்டிறுதியில் தமிழக்க் கடற்கரையைத் தாக்கி பல்லாயிரம் உயிர்களுடன் ஏராளமான சொத்துக்களை அழித்துச் சென்ற சுனாமி என்ற ஓங்கலை தந்த பாடம் தடங்கல்களுடனிருந்த கயவாய்கள் பகுதிகளில் பேரழிவுகள் நேர்ந்ததைக் காட்டியது. மணக்குடியில் கடலை ஒட்டி கட்டப்பட்டிருந்த பாலம் ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறியப்பட்டு இரு புறங்களிலும் வாழ்ந்த மக்களைக் குடியிருப்புகளோடு அழித்து விளையாடியது. நாகப்பட்டடினத்திலும் கடலை ஒட்டியிருந்த தாழ்மட்டப் பாலம்தான் பேரழிவுக்குக் காரணம் என்பதைக் காட்டியது.

இந்த நிலையில் மா.செ.சுவாமிநாதன் என்னும் வல்லரசு ஒற்றன் ஆற்றுக்கழிமுகங்களில் அலையாற்றிக் காடுகள் ஆகிய மண்குதிர்க் காடுகளை(மாங்குரோவ் என்பது ஆறுகளில் நடுவில தோன்றும் மணற்திட்டுகளான மண்குதிர் என்ற சொல்லின் திரிபே. மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல் என்ற பழமொழி கேட்டிருக்கிறோமல்லவா?) வளர்த்தால் ஓங்கலைத் தாக்குதல் மட்டுப்படும் என்ற பொய்யைப் பரப்பினான். படித்ததால் சிந்திக்கும் திறனை இழந்தவர்களும் பணவெறி பிடித்தவர்களான சில படித்தவர்களும் அவன் பின்னால் ஓடினர். த்மிழக மெங்கும் ஆற்றுக் கயவாய்களின் குறுக்கே அலையாற்றிக் காடுகளை வளர்த்துவைத்துள்ளனர். அதன் விளைவுதான் இந்த மழைப் பொய்ப்பு.

இந்த அலையாற்றிக் காடுகள் ஓங்கலை வீங்கலை ஆகிய ஏற்றவற்றம் புயல்களால் எழும் அலைகளை நிலப்பகுதிக்குப் பாதிப்பை மட்டுப்படுத்தி நீரை ஆறு வாங்கிக் கொள்ளும் நிகழ்முறையைத் தடுத்து அண்டை அயல் நிஇலப்பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதோடு மழை வெள்ளங்களும் கடலினுள் எளிதாக விழாமல் தடுத்து உள்நாட்டில் ஆற்றோரங்களில் பேரழிவுகளையும் ஏற்படுத்தக் காரணமாகிறது. இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளவோ ஆட்சியாளருக்கு எடுத்தரைக்கவோ எவருமில்லை என்பது பெரும் அவலம். ஓங்கலைப் பணியின் போது கருத்துரைத்த என்னை எவரும் பொருட்படுத்தவும் இல்லை.

கடந்த பல ஆண்டுகளாகவே கடற்கரையிலும் மலைப்பகுதிகளிலும் மட்டும் பெய்யும் மழை உள்மாவட்டங்களில் பெய்யாமல் போவதும் இந்த காற்றழுத்த்த் தாழ்வுநிலை நிலத்தைத்  தொடாமல் மேகங்கள் வானத்துக்கு எழும்பி மலைகளில் மோதி மழை பெய்வதாலும் கடற்கரயிலிருந்து எழும்பி அண்டை நிலங்களில் மட்டும் பெய்து ஓய்ந்துவிடுவதாலும்தான்.

இன்று(26-10-2016 தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பில் காட்டப்பட்ட மேற்பில் தாழ்வழுத்த மண்டலத்திலிருந்து விசிறல்கள் ஆந்திரத்தின் ஆறுகளினுள் நுழைவது தெளிவாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த தாழ்வழுத்த மண்டிலமும் ஆந்திரம் நோக்கி நிற்க தமிழகம் நோக்கிய பகுதி மழுங்கிக் காணப்படுகிறது. எனவே அக்டோபர் 27இலிருந்து 30க்கு வானிலையியல் துறையினரால் தள்ளிப்போடப்பட்ட வட கிழக்குப் பருவமழை அன்றும் தொடங்கும் என்று தோன்றவில்லை.தமிழகத்தை மேற்குலகுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யும் மேய்ச்சல் நிலமாகவும் அதை வல்லரசியப் போருக்கான ஒரு படைத்தளமாகவும் மாற்ற தமிழகத்திலிருந்து மக்களை வெளியேற்றும் பல்வேறு நடவடிக்கைகளாக தமிழகத்துக்கு நீர் வழங்கும் பகுதிகளை அண்டை மாநிலங்களுடன் இணைத்தது, காவிரி நீர் மறுப்பு, கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்து தமிழக மீனவர்களைக் கொன்றும் தாக்கியும் கொடுமைப்படுத்துவது, கூடங்குள்ளத்தில் ஒவ்வொன்றாக அணுவுலைகளைக் கட்டி அவ்வட்டார மக்களை மிரட்டுவது. கன்னெய்யம்(பெட்ரோலியம்), இயற்கை வளி எடுக்கவும் காவிரிப படுகையை அழிப்பது, மேற்கு மாவட்டங்கள் வழியாக இயற்கை வளி கொண்டு செல்ல வயல்களைப் பயன்படுத்துவது, நீயூட்ரினா ஆய்வகம் என்ற பெயரில் பாறைகளை உடைத்து வயல் வெளிகளை கற்களைப் போட்டு மூடுவது, இறுதியில் குமரி மாவட்டத்தில் இனையம் புத்த்ன்துறையில் அனைத்துலகக் கப்பல் துறைமுகம் என்ற பெயரில் மலைகளையும் வயல்வெளிகளையும் தென்னந்தோப்புகளையும் அழித்தல் என்று மிக முனைப்புடன் தில்லி செயற்பட்டு வருகிறது. அவற்றில் ஓன்றுதான் மா.செ.சுவாமிநாதனின் அலையாற்றிக் காடுகள் திட்டமும். தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் நின்றுவிடாமல் அலையாத்திக் காடுகளை ஆற்றுக் கழிமுகங்களிலிருந்து அகற்ற அரசுக்கு வேண்டுகை வைப்போம். செய்ய மறுத்தால் நாமே களத்தில் இறங்கி அவற்றை அகற்றுவோம்.

0 மறுமொழிகள்: